கே. பி. கந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. பி. கந்தசாமி (மறைவு 1994) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ் நாளிதழான தினகரனின் நிறுவனர்.[1] இவர் தி. மு. க வுக்கு ஆதரவாக தினகரன் நாளிதழை துவக்கி நடத்தினார். இவர் சி. பா. ஆதித்தனாரின் மருமகன்[2] இவர் ஐந்தாவது தமிழக சட்டமன்றத்துக்கு தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] அப்போது அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தார். வைகோ தி.மு.க வை விட்டு பிரிந்து ம. தி. மு. க வை துவக்கியபோது இவரும் தி.மு.கவிலிருந்து பிரிந்து வைகோவுடன் சென்றார். இவரின் மகன் கே. பி. கே. குமரன் என்பவராவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sun acquires Dinakaran newspapers". rediff. 17 June 2005. http://www.rediff.com/money/2005/jun/17sun.htm. 
  2. Jeffrey, Robin (24 March 2000). India's newspaper revolution. C. Hurst & Co. p. 79,80,114,135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85065-383-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85065-383-6.
  3. "Tamil Nadu Legislative fifth assembly: seventh session-first meeting". Tamil Nadu Government. 2–13 February 1973. http://www.assembly.tn.gov.in/archive/Resumes/05assly/05_07_1.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._கந்தசாமி&oldid=3821244" இலிருந்து மீள்விக்கப்பட்டது