சூரியச் சுழற்சி 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியச் சுழற்சி 1
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்மார்ச்சு 1755
இறுதி நாள்சூன் 1766
காலம் (வருடங்கள்)11.3
அதிக கணிப்பு86.5
அதிக கணிப்பு மாதம்சூன் 1761
குறைந்த கணிப்பு11.2
சுழற்சிக் காலம்
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 2 (1766-1775)
யோகண் ருடால்ஃப் உல்ஃப்

சூரியச் சுழற்சி 1 (Solar cycle 1) என்பது சூரியனின் மேற்பரப்பில் சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட முதலாவது சூரியச் சுழற்சியாகும். இச்சுழற்சி 1755 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தொடங்கி 1766 ஆம் ஆண்டு சூன் மாதம் வரையில் 11.3 ஆண்டுகளுக்கு நீடித்ததது[1][2]. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 1 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 86.5 எண்ணிக்கையும் (சூன் 1761) குறைந்த பட்சமாக 11.2 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது.[3]

1843 ஆம் ஆண்டில் சூரியச் சுழற்சியைக் கண்டுபிடித்த சாமுவேல் எயின்றிச் சிகாவபேயால் ஊக்கம்பெற்ற யோகண் ருடால்ஃப் உல்ஃப் சூரியச் சுழற்சி #1 ஐ கண்டுபிடித்தார். இதற்காக இவர் கலீலியோவின் முதலாவது தொலைநோக்கி அவதானிப்புகள் தொடங்கி கிடைத்த அனைத்து சூரிய புள்ளிகளின் தரவுகளையும் திரட்டினார். இதனால் சிகாவபே திட்டமிட்டிருந்த 10 ஆண்டுகள் என்ற சூரிய சுழற்சியின் சராசரி நீளத்தை 11.11 ஆண்டுகள் என இவரால் மேம்படுத்த முடிந்தது[4]. எனினும், சுழற்சிகளை அடையாளம் காண்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரமாக 1755 க்கு முற்பட்ட போதுமான அவதானிப்புகளை இவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே 1755–1766 வரையிலான ஆண்டுகளை மரபுமுறைப்படி சூரியச் சுழற்சி#1 என எண்ணிட்டார். 1852 ஆம் ஆண்டில் உல்ஃப் தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
  4. Stuart G. Clark, The Sun Kings, p. 73, Princeton University Press, 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-12660-7.
  5. Christophe Letellier, Chaos in Nature, pp. 344-346, World Scientific, 2013 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9814374423.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_1&oldid=3792842" இலிருந்து மீள்விக்கப்பட்டது