பறகஹதெனிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பறகஹதெனிய (Paragahadeniya, சிங்களம்: පරගහදෙනිය) என்பது இலங்கையில் குருணாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முசுலிம் கிராமம் ஆகும். இது கண்டி - கலகெதரை கணவாய் ஊடாக குருணாகல் நோக்கி இருக்கும் நெடுஞ்சாலையில் 16 ஆம், 17 ஆம் மைல் கற்களுக்கிடையில் அமைந்துள்ளது.

தோற்றம்[தொகு]

குருணாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம்கள் அதிக அள்வில் வாழும் கிராமங்களுள் பறகஹதெனிய முதலிடத்தைப் பெறுகிறது. சிங்களத்தில் "பறகஹ"-පරගහ என்றழைக்கப்படும் மரங்கள் செரிந்து வளர்ந்திருந்ததாலும். மலை நாட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ள சம பூமியைக் குறிக்கும் தெனிய - දෙනිය என்ற சொல்லையும் சேர்த்தே பறகஹதெனிய என்ற சிங்களப் பெயர் இவ்வூருக்கு வழங்கப்படலாயிற்று.

இக் கிராமத்தின் வடக்கு தெற்கு ஓரங்களில் தெதுரு ஓயா எனும் பெரிய ஆற்றின் கிளைகள் ஓடுகின்றன. இவ்வாறுகளின் கொஸ்பத்து ஓயா ஆற்றங்கரையில் ஆதி முஸ்லிம்கள் ‘போண்டாவ’ என்ற குக்கிராமத்தில் (தற்போது பஞ்சிகாவத்த) வாழ்ந்தார்கள் எனவும் காலக்கிரமத்தில் அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கண்டி குருநாகல் பிரதான வீதி சீரமைக்கப்பட்டு பிரபல்யம் அடைய ஆரம்பித்ததும் இப்பழங்குடிகள் பாதை ஓரமாக வந்து குடியேறினார்கள் என்பதும் வரலாறு. இப் போண்டாவ கிராமமே பின்னர் பறகஹதெனியவாயிற்று.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. www.jamiulanwar.com

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறகஹதெனிய&oldid=2099499" இலிருந்து மீள்விக்கப்பட்டது