இலத்திரனியல் நிகழ்த்துகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலத்திரனியல் நிகழ்த்துகை (Presentation program) என்பது தகவல்களை படவில்லைக்காட்சி மூலம் காட்சிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொகுப்பு ஆகும். இலத்திரனியல் நிகழ்த்துகையில் பிரதான மூன்று விடயங்கள் காணப்படுகின்றன. தொகுப்பாளர் உரைப் பகுதியினை உள்ளிடுதல், தொகுத்தல் ஆகியவையும் இயங்குபட புகைப்படங்களை கையாள்தல் உள்ளிடல் ஆகியவையும் உள்ளடக்கத்தைக் காட்சிப்படுத்துவதற்காக படவில்லைக்காட்சிக் காட்சியைக் கொண்டிருத்தல் ஆகியவையுமே அம்முன்று விடயங்களாகும்.[1]

பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்படுவதும் அறியப்பட்டதுமான இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் மைக்ரோசாப்ட் பவர்பொயின்ட் ஆகும். இம்மென்பொருளை விடவும் ஓபின் ஆபிஸ், அப்பிள் நிறுவனத்தின் கீநோட் என்பவையும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rouse, Margaret (March 2011). "presentation software (presentation graphics)". WhatIs.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2013.