குல் முகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல் முகமது
Gul Mohammed
गुल मोहम्मद
பிறப்பு(1957-02-15)பெப்ரவரி 15, 1957
புதுதில்லி, இந்தியா
இறப்புஅக்டோபர் 1, 1997(1997-10-01) (அகவை 40)
புதுதில்லி, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
மூச்சுத்தடை நோய்
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுமுன்னாள் குள்ள மனிதர் (1990–2011)
உயரம்0.57 m (1 அடி 10+25 அங்)

குல் முகமது (Gul Mohammed) ( பிப்ரவரி 15, 1957 – அக்டோபர் 1,1997) என்பவர் இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் வாழ்ந்த மிகவும் குள்ளமான மனிதர் ஆவார். கின்னசு உலக சாதனைகள் புத்தகத்தில் இவருடைய பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் வாழ்ந்த காலத்தில் இப்படியொரு குள்ளமான மனிதர் இருந்தார் என்பதும் இவருடைய உயரமும் நேர்முகமாக சந்தித்து உறுதிபடுத்தப்பட்டன.[1]

புதுதில்லியில் உள்ள இராம் மனோகர் உலோகியா மருத்துவமனை 1990 ஆம் ஆண்டு சூலை 19 அன்று குல் முகமதுவைப் பரிசோதித்து, இவரது உயரம் 1 அடி 10.4 அங்குலம் அதாவது 57 செ.மீ எனவும் இவரது எடை 17.0கி.கி எனவும் உறுதிப்படுத்தியது. தொடர் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் பாதிக்கப்பட்டு, நீண்டநாட்கள் மூச்சுத்தடை நோயால் அவதிக்குள்ளாகிய இவர் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி் மரணமடைந்தார்.[2] மிகவும் குள்ளமான மனிதர் என்ற இவருடைய சாதனையை நேபாளத்தைச் சேர்ந்த சந்திர பகதூர் தாங்கி என்பவர் முறியடித்துள்ளார். இவருடைய உயரம் மொத்தமாகவே 54.6 செ.மீ மட்டுமேயாகும்.[3] இவர் 2015 ஆம் ஆண்டில் இறந்தார்.

முன்னர்
பௌலின் மசுடர்சு
மிகவும் குள்ளமான மனிதராக அறியப்படுபவர்
1990-2011
பின்னர்
சந்திர பகதூர் தாங்கி

மேற்கோள்கள்[தொகு]

  1. News. (1997-10-03). Gul Mohammed; World's Shortest Man. Los Angeles Times. Retrieved 2008-08-30.
  2. Abhijit Naik. (2010-06-29) Smallest Man in the World பரணிடப்பட்டது 2012-07-22 at Archive.today. Buzzle.Com Website. Retrieved 2011-06-17.
  3. Gurubacharya, Binaj (Feb 26, 2012). "72-year-old Nepalese man from remote mountain village declared shortest human on record". அசோசியேட்டட் பிரெசு. http://news.yahoo.com/72-old-nepalese-man-remote-mountain-village-declared-113008312.html. பார்த்த நாள்: December 2, 2012. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்_முகமது&oldid=3791379" இலிருந்து மீள்விக்கப்பட்டது