கூத்தூர் (நாகப்பட்டினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூத்தூர் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ்வேளுர் வட்டத்திலுள்ள கிராமம் ஆகும். இங்கு, சுமார் ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஒரு காலத்தில் கூத்தாடிகள் அதிகம் வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது[சான்று தேவை]. இக்கிராமத்தில், அனைத்து மதமக்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள்.

விவசாயம்[தொகு]

இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தினையே நம்பியுள்ளனர். பாசனத்திற்கு பெரும்பாலும் காவிரி நீரையே நம்பியுள்ளனர். காவிரியின் கிளை நதியான வெண்ணாறு பாய்ந்து வளப்படுத்துகிறது. ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த ஊரில் காவிரி நீர் வராத காரணத்தால் இன்று ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. எங்கள் ஊரில் ’உழுபவனுக்கெ நிலம் சொந்தம்’ என்று போராடக்கூடிய அமைப்பு ஒன்று உள்ளது[சான்று தேவை]. அந்தமைப்பின் தலைவராக கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் உள்ளார். இவர் வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பும், வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்டவும் ஏற்பாடு செய்து உதவி வருகிறார்.

வசதிகள்[தொகு]

முஸ்லிம் மதத்தினைச் சார்ந்த வீடுகளில் வீட்டுக்கொருவர் வெளிநாட்டில் வேலைப் பார்த்துவருகின்றனர்[சான்று தேவை]. ஆகையால் இந்த ஊர் அனைத்து வசதிகளும் உடைய ஊராக உள்ளது. இங்கு, புகைவண்டி நிலையம், அரசு பொதுவுடைமை வங்கி, கூட்டுறவு வங்கி, அஞ்சல் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி போன்றவை உள்ளன. இந்த ஊர் அருகில் திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் உள்ளது. இங்குதான் ஆசியாவிலேயே மிகப்பெரியத்தேர் உள்ளது[சான்று தேவை].

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தூர்_(நாகப்பட்டினம்)&oldid=1949693" இலிருந்து மீள்விக்கப்பட்டது