கல்வி உரிமை
கல்வி உரிமை அல்லது கல்வி பயில்வதற்கான உரிமை என்பது படிப்பறிவின்மை, இளைஞர்கள் அவர்தம் மனித உரிமையையும், அடிப்படை சுதந்திரங்களை மதிப்பதற்கும், கல்வி பயிலுதலில் பாகுபாட்டை அழிப்பதற்கான முயற்சிகளை, ஐக்கிய நாடுகள், ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சி கழகத்துடன் ஒருமித்தும், ஒத்துழைத்தும் மேற்கொண்டு வருகின்றது. 1970 ஆம் ஆண்டை சர்வதேச கல்வி ஆண்டாக அங்கீகரித்து ஐக்கிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகமும் ஒன்றிணைந்து ஒத்துழைத்து ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தை நிறுவியது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் ஒப்பந்தம், அனைத்துலக இனப்பாகுபாட்டை நீக்கும் சாசனம் பெண்களுக்கு எதிர்ப்பான அனைத்து வகையான பாகுபாட்டை நீக்கும் சாசனம், குழந்தை உரிமை சாசனம் ஆகியவற்றில் கல்விப் பயிலும் உரிமையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் உள்ள வகைமுறைகள்
[தொகு]அனைவரும் கல்விப் பயிலும் உரிமையை அனுபவிக்க வேண்டும் என்பது அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் 26 ஆம் பிரிவுக் கூறில், அனைவரும் கல்விப் பயிலும் உரிமை உண்டு என்று வகுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வி அனைவருக்கும் இலவசமாகவும்,கட்டாயமாகவும் தரப்படல் வேண்டும்.தொழில் நுட்பக் கல்வி மற்றும் தொழில் நெறிஞர் கல்வி, அனைவர்க்கும் பொதுவாக கிடைக்க வேண்டும் , உயர்கல்வி அனைவரும் சமமாக பெற கூடியதாக இருக்க வேண்டும் என்று வகுத்துக் கூறப்பட்டுள்ளது. கல்வியின் குறிக்கோள்;
- .முழுமையான மனித ஆளுமையையும், தன்மான உணர்வையும் மேம்படுத்தல் ,
- மனித உரிமையையும், அடிப்படை சுதந்திரத்தையும் மதிக்க வலியுறுத்துதல்,
- ஒவ்வொருவரும் கட்டற்ற சமுதாயத்தில் திறம்பட பங்கேற்றல்,
- உடன்பாடு, பொறுமை மற்றும் தோழமையை அனைத்து நாடுகளிடையேயும், இனத்தவரிடையேயும், சமயத்தவரிடையேயும் மேம்படுத்தல்,
- அமைதிக்காக ஐக்கிய நாடுகளின் செயல்பாடுகளை மேலுயர்த்துதல், ஆனவைகளாகும்.
பெண்களின் கல்வி பயிலும் உரிமை
[தொகு]அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்கும் சாசனத்தின் தரப்பில் உள்ள நாடுகள் அனைத்தும், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை; பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வித் துறையில் உரிமைகள் பெறுவதின் பொருட்டு மேற்கொள்ள வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் சமத்துவத்தின் அடிப்படையில், பெண்களுக்கும்-
- அதே போன்ற தரத்தில் தொழில் துறை மற்றும் வாழ்க்கை தொழிற் கல்வியில், கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு மற்றும் பட்டயம் அனைத்து வகையான கிராமத்திலும் நகரத்திலும் பெறவும்;
- அதே போன்ற பாடத்திட்டம், தேர்வுமுறை, கல்வி தகுதி உள்ள ஆசிரியர்கள், பள்ளி வளாகம், தரமுள்ள உபகரணங்களை அணுகும் உரிமை;
- ஆண்கள் மற்றும் பெண்ணின் அனைத்து நிலை பங்கின் உள்ள மாற நிலையான கோட்பாட்டை நீக்க, அனைத்து நிலை கல்வியிலும் ஆண்பெண் இணைக்கல்வி முறையை ஊக்கமூட்டவும், மற்றும் பிறவகை கல்வியிலும் இலக்கை அடைய, பாடநூல், பள்ளி நிகழ்ச்சி மற்றும் கற்பிக்கும் முறையில் திருத்தத்தை தெரிவு செய்ய வேண்டும்;
- உதவித்தொகை மற்றும் கல்வி மானியம் பெற-வாய்ப்பு பெற்று பயன்பெறவும்;
- கல்வியை தொடர வாய்ப்பு, முதியோர் மற்றும் நடைமுறை சார்ந்த எழுத்தறிவு திட்டம் உட்பட அனைத்தும் அணுகும் வாய்ப்பு. குறிப்பாக குறித்த காலத்திற்கு முன்னதாக ஆணுக்கும், பெண்ணுக்கும் கல்வியில் ஏதேனும் இடைவெளி இருந்தால் அதை நிவர்த்திக்க சாத்திய படுத்துதல்;
- கல்வியை கைவிட்ட மாணவிகளின் எண்ணிகையை குறைக்க முனைதல், குறித்த காலத்திற்கு முன்னதாகவே பள்ளியை கைவிட்ட பெண்டிருக்க்காகவும், சிறுமிகளுக்காகவும் திட்டங்களை தீட்டுதல்;
- திறம்பட விளையாட்டிலும், உடற்கல்வியிலும் பங்குகொள்ள வாய்ப்பு அளித்தல்.
குழந்தைகளின் கல்வி பயிலும் உரிமை
[தொகு]குழந்தைகளின் கல்வி உரிமை பற்றிய சிறப்பு வகைமுறைகள் குழந்தை உரிமை சாசனத்தின் 28 மற்றும் 29 ஆம் பிரிவுக் கூற்றில் கூறப்பட்டுள்ளது .இச்சாசனத்தின் தரப்பில் உள்ள நாடுகள் குழந்தைகள் உரிமையை அங்கீகரிக்கவும், சமஉரிமை அடிப்படையில் -
- அனைவர்க்கும் இலவசமான, கட்டாய தொடக்க கல்வி;
- பலவிதமான உயர்நிலைக் கல்வியை, பொது மற்றும் வாழ்கைத் தொழிற் கல்வியை ஊக்கமளித்து மேம்படுத்தவும்,இவை அனைத்தையும் எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க கூடியதாக அமைத்தல், இலவச கல்வி மற்றும் தேவை நேரும்போது நிதி உதவி தரும் நடவடிக்கைகள் அறிமுகபடுத்துதல்;
- உயர்கல்வியை அனைவரும் அணுகத்தக்கதாக அமைத்துக் கொடுத்தல்;
- எல்லா குழந்தைகட்கும் கல்வி மற்றும் வாழ்கைத் தொழிற் கல்வியைப் பற்றி தகவல்கள் மற்றும் வழிகாட்டலை அணுகத்தக்கதாக அமைத்திடல்;
- அனைத்துக் குழந்தைகளும் சீராக பள்ளிக்கு வருகை தர ஊக்கமளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
இந்தியாவின் நிலைப்பாடு
[தொகு]இந்திய அரசியலமைப்புச் சட்டதில், அரசு தகுந்த வகைமுறைகளை கல்வி உரிமையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டும் என்று பிரிவுக் கூறு 41 இல் கூறப்பட்டுள்ளது. அரசு எல்லா குழந்தைகளுக்கும் ஆரம்ப கட்ட குழந்தை பருவத்தை காக்கவும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கெல்லாம் கட்டாய கல்வி கொடுக்க வேண்டும் என்று பிரிவுக் கூறு 45 இல் கூறப்பட்டுள்ளது.
உன்னிக்கிருஷ்ணன் எதிர் ஆந்திரா மாநிலம் (வழக்கு எண்: (1993) 1 SCC645) என்ற வழக்கில் அனைத்து குழந்தைக்கான கல்வி உரிமை வயது 14 வயதாக இந்திய உச்ச நீதிமன்றம் உயர்த்தியது. அரசு சிறப்பான கவனத்துடன் கல்வி மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக பலவீனமான மக்கட் பிரிவை சேர்ந்த ஆதி திராவிட வகுப்பினரையும், பழங்குடியினரையும் காப்பதற்கும் அவர்களை சமூக அநீதியில் இருந்தும், அனைத்து விதமான சுரண்டல்களில் இருந்து காக்க வேண்டும் என்று பிரிவுக் கூறு 46 ஆம் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு 86 வது ( சட்டத் திருத்தம்) சட்டம், 2002 மூலம் பிரிவுக் கூறு 21 A அரசியல் அமைப்பில் நுழைக்கப்பட்டது. இதன் மூலம் ஆறு வயது முதல் 14 வயதுக்குட்டபட்ட குழந்தைகட்கு கல்வி உரிமை, அடிப்படை உரிமையாக பிரிவுக் கூறு 21 A வில் நிர்ணயக்கப்படுள்ளது.