அகலப் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அளவீடுகளின் ஒப்பீடு
போபால் அருகே பிராட் கேஜ் ரயில் பாதை

அகலப் பாதை (Broad gauge) தொடர்வண்டிப் போக்குவரத்தில் செந்தர இருப்புப் பாதையை விட (1,435 மிமீ (4 அடி 8 12 அங்)) அகலமான இருப்புப் பாதை ஆகும். உருசியா, இந்தியா, அயர்லாந்து மற்றும் ஐபீரியா தொடர்வண்டி இருப்புப் பாதைகள் அகலப் பாதையானவை. இவ்வகலப் பாதைகள் துறைமுகங்களில் மின்தூக்கிகள் நகரவும் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]

இந்தியா[தொகு]

இந்தியா, பாக்கித்தான், வங்காள தேசம், இலங்கை, அர்கெந்தீனா, சிலி நாடுகளில் பரவலாகப் பயன்படும் இருப்புப்பாதை 5 ft 6 in/1,676 mm அளவிலான அகலப் பாதையாகும். ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இயங்கும் வளைகுடா பகுதி விரைவுக் கடப்பி (Bay Area Rapid Transit) இந்த அகலப் பாதையைப் பயன்படுத்துகின்றது. இந்த அளவிலான அகலப் பாதை "இந்தியப் பாதை" எனவும் அறியப்படுகின்றது. வட அமெரிக்காவில் இந்த அகலப் பாதை "டெக்சாசு பாதை" எனப்படுகின்றது. இதுவே உலகில் பயன்படுத்தப்படும் மிகவும் அகலமான இருப்புப் பாதை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Connection
  2. "Railroads Asia – Up And Down India".
  3. Indian Railways: Some Fascinating Facts, "Train Atlas", Train Atlas, Indian Railways, 2003
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலப்_பாதை&oldid=3752009" இலிருந்து மீள்விக்கப்பட்டது