ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்பது தமிழகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கிவரும் கூடங்கள் ஆகும். தமிழகம் முழுவதும் 268 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன.[1] இவை வேளாண் விளை பொருட்களை வாங்கவும் விற்கவும் அதை முறைப்படுத்தவும் தமிழக அரசால் 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளை பொருள் விற்பனை (ஒழுங்கு முறை) சட்டத்தை பிறப்பித்தது அமைக்கப்பட்டவை ஆகும்.

கூடங்களில் உள்ள வசதிகள்[தொகு]

இக்கூடங்களில் இடவசதியைப் பொருத்து அலுவலகம், ஏல அரங்கு, உலர்களம், விவசாயிகள்-வணிகர் ஓய்வு விடுதி, சுகாதாரவசதி,குடிநீர்வசதி, குளியலறை, ஊரக்கிடங்குகள், பணபட்டுவாட அறை, அக்மார்க் ஆய்வுக்கூடம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விற்கப்படும் விளைபொருட்கள்[தொகு]

நிலக்கடலை, புளி, எள், கரும்பு வெல்லம், நெல், பருத்தி, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு, ஆமணக்கு, தேங்காய், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, துவரை, மாம்பழம்,

விற்பனை முறை[தொகு]

விவசாயிகளால் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்ற விளை பொருட்கள் தனித்தனிக்குவியலாக அடுக்கி வைக்கப்படுகின்றன. வியாபாரிகள் இப்பொருட்களை வாங்க மறைமுக ஏலம் (டெண்டர்) முறை பின்பற்றப்படுகிறது. வியாபாரிகள் விளைபொருட்களை வாங்கியவுடன் விவசாயிகளுக்கு பணம் உடனே கிடைத்துவிடும்.[2]

கூடுதல் பலன்கள்[தொகு]

தமிழ்நாடு உழவர் நல நிதித் திட்டம் என்ற திட்டம் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாாியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக ஒரு ஆண்டுக்கு ஒரு முறை அல்லது அதிக அளவு தங்களது விளைச்சலை விற்கும் அனைத்து உழவர்களும் இதில் சேரலாம். இத்திட்டத்தின் உறுப்பினர் விபத்து, பாம்புக்கடி போன்றவற்றின் காரணமாக மரணமடைதால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம்வரை இழப்பீடு அளிக்கப்படும். மேலும் விபத்தின் காரணமாக பயனாளி நிரந்தர ஊனமுற்றால் ரூ.75,000 யும், சிறிய அளவிளான ஊனத்திற்கு ரூ.50,000 யும் இழப்பீடு வழங்கப்படும்.[3]

மேற்கோள்[தொகு]