சங்கவை (நாவல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கவை
சங்கவை புதினத்தின் அட்டைப்படம்
நூலாசிரியர்ஜோஸஃபின் ஜெயஷாந்தி
அட்டைப்பட ஓவியர்செந்தில்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைகதை
வகைபுதினம்
வெளியிடப்பட்டது2014 (விருட்சம் பதிப்பகம்)
ஊடக வகைபுத்தகம்
பக்கங்கள்927

சங்கவை என்பது ஜோசஃபின் ஜெயசாந்தி எழுதிய ஒரு புதினம் ஆகும். கல்லூரிப் படிப்பிற்காக திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குச் சென்று விடுதியில் தங்கி படிக்கும் பிரதான கதாபாத்திரம் சங்கவை. தமிழ்ச்செல்வி மற்றும் ஈஸ்வரி அவளது தோழியர். இந்த மூன்று பெண்களின் கல்லூரி வாழ்க்கை மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் ஊர்களில் நடக்கும் சம்பவங்கள் கதையாகப் புனையப்பட்டுள்ளது.

சிறப்பு[தொகு]

927 பக்கங்களைக் கொண்ட சங்கவை, தமிழில் பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டுள்ள மிக நீண்ட புதினம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.[சான்று தேவை]

விமர்சனங்கள்[தொகு]

ஆயிஷா இரா. நடராசன் 'படித்ததில் பிடித்தது 50க்கு 50' என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையில் மிகப் பெரிய நாவல், பெண் கல்வி பற்றிய நாவல் எனக் குறிப்பிட்டிருப்பதோடு பல்வேறு அதிர்ச்சிகளை எதிர்கொள்ளச் செய்கிற நாவல் என்றும் குறிப்பிடுகிறார்.[1]

எழுத்தாளர் இமையம் அண்ணாமலை எழுதியுள்ள விமர்சனக் கட்டுரையில், "சங்கவை ஒரு நாவலல்ல. பல நாவல்களின் தொகுப்பு." என்று எழுதியுள்ளார். [2]

விருது[தொகு]

2015-ம் ஆண்டிற்கான திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசு சங்கவை நாவலுக்கு கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் வழி கிடைத்த முதல் அங்கீகாரம். [3]

2016-ம் ஆண்டு திருப்பூர் இலக்கிய விருது விழாவில் சிறந்த தமிழ் நாவலுக்கான பரிசு சங்கவை நாவலுக்கு கிடைத்தது. இவ்விருது கவிஞர் சுகந்தி சுப்பிரமணியம் நினைவாக வழங்கப்படுவதாகும். [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கவை_(நாவல்)&oldid=3242638" இலிருந்து மீள்விக்கப்பட்டது