ஆன்ட்ரூசோவ் செயல்முறை வினை
ஆன்ட்ரூசோவ் செயல்முறை வினை (Andrussow process) என்பது ஆக்சிசன் மற்றும் பிளாட்டினம் வினையூக்கியின் முன்னிலையில் மீத்தேன் மற்றும் அம்மோனியாவில் இருந்து ஐதரசன் சயனைடு உற்பத்தி செய்யும் தொழிற்துறை செயல்முறை வினையாகும்[1][2]
- CH4 + NH3 + 1.5 O2 → HCN + 3 H2O
பக்க வினைகள்
[தொகு]இந்த வினை அதிகமான அளவில் வெப்பம் உமிழும் வினையாகும். இவ்வினையின் உள்ளுறை வெப்ப மாற்றம் -481.06 கிலோசூல்[3] இவ்வினையில் வெளிப்படும் வெப்பம் ஏனைய பக்க வினைகள் நிகழ வினையூக்கியாக செயல்படுகிறது.
- CH4 + H2O → CO + 3 H2
- 2 CH4 + 3 O2 → 2 CO + 4 H2O
- 4 NH3 + 3 O2 → 2 N2 + 6 H2O
மேற்கண்ட இந்த பக்க வினைகளை 0.0003செ என்ற குறைவான அளவில் வெளியேறு வெப்பத்திற்கு உட்படுத்துவதன் மூலமாக குறைக்க முடியும்.[4]
வினையின் அடிப்படையிலான இச்செயல்முறை 1927 ஆம் ஆண்டில் லியோனிது ஆந்திரூசொவ் என்பவரால் கண்டறியப்பட்டது. அடுத்த ஆண்டில் அவர் இச்செயல்முறையை விரிவு படுத்தினார். இதனால் அவ்வினை அவருடைய பெயரான ஆன்ட்ரூசோவ் வினை என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Leonid Andrussow (1927). "Über die schnell verlaufenden katalytischen Prozesse in strömenden Gasen und die Ammoniak-Oxydation (V)". Berichte der deutschen chemischen Gesellschaft 60 (8): 2005–2018. doi:10.1002/cber.19270600857.
- ↑ L. Andrussow (1935). "Über die katalytische Oxydation von Ammoniak-Methan-Gemischen zu Blausäure (The catalytic oxidation of ammonia-methane-mixtures to hydrogen cyanide)". Angewandte Chemie 48 (37): 593–595. doi:10.1002/ange.19350483702.
- ↑ Deák, Gyula (1980), Menné reakcie v organickej chémii, Bratislava: Vydavateľstvo technickej a ekonomickej literatúry, p. 14
- ↑ Pirie, J M (1958). "The Manufacture of Hydrocyanic Acid by the Andrussow Process". Platinum Metals Rev. 2 (1): 7–11. http://www.platinummetalsreview.com/pdf/pmr-v2-i1-007-011.pdf. பார்த்த நாள்: 28 March 2014.