டெக்ஸ் வில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெக்ஸ் வில்லர் (Tex Willer) 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 திகதி முதல் "போனல்லியோ" குழுமத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளிவரும் பிரபலமான காமிக்சு கதாபாத்திரம் ஆகும். இது இத்தாலியக் கௌபாய் கதாபாத்திரங்களுள் ஒன்றாகும். இது லயன் காமிக்ஸ் நிறுவனத்தாரால் தமிழில் வெளியிடப்படும் ஒரு வரைகதைப் புத்தகமாகும். கதையமைப்பு ரேஞ்சர் டெக்ஸ் வில்லர். செவ்விந்தியர்களின் நவஹோ பிரிவினரின் தலைவர் இரவுக்கழுகும் இவரே. இவரது தோழர் கிட் கார்சன், செவ்விந்திய நண்பன் டைகர், மகன் கிட் ஆகியோருடன் இணைந்து அநீதி, அக்கிரமம் நடக்கும் இடங்களிலெல்லாம் சென்று நீதியை நிலைநாட்டுதலையே தலையாய கடமையாகக் கொண்டவர்.. தமிழ் சித்திரக்கதைகளில் சிறப்பான வெற்றி கண்டு நம்பர் ஒன் இடத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்திருப்பவர்..

டெக்ஸ் வில்லரின் கதைகள்[தொகு]

டெக்ஸ் வில்லரின் கதைகள் இதுவரை லயன் குழுமத்தினரால் 51 கதைகளாக வெளியிடப்பட்டுள்ளது.

  • கதைகள் வந்த மொத்த இதழ்கள் மறுபதிப்புடன் சேர்த்து மொத்தம் -53
  • டெக்ஸ் வில்லரின் தொடர்கதைகளைத் தனித்தனிக் கதைகள் என்று கணக்கு எடுத்துக்கொண்டால் சிகப்பாய் ஒரு சொப்பனம் -51 வது இதழ் (இதில் திகில் காமிக்ஸில் வந்த இதழும் அடக்கம்).
  • கதைகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தம் - 42கதைகள்
  • இரண்டு பாகங்களாகத் தொடராக வந்தவை -3 கதைகள்
  • மூன்று பாகங்களாகத் தொடராக வந்தவை -3 கதைகள்
  • காமிக்ஸ் எக்ஸ்பிரஸில் வந்த "திகில் நகரில் டெக்ஸ் " பாதியில் நின்றுவிட்டது ஆகையால் 53ல் இது அடக்கம் கிடையாது.

வரிசைஎண் லயன் வெளியீடு எண்

  1. தலைவாங்கிக் குரங்கு 19
  2. பவளச்சிலை மர்மம் 27
  3. பழிவாங்கும் பாவை 33
  4. பழிக்குப் பழி (கோடை மலர்-87) 36
  5. டிராகன் நகரம் 50
  6. இரத்த முத்திரை 56
  7. வைகிங் தீவு மர்மம் 60
  8. மாய எதிரி (நடுக்கடலில் அடிமைகள்) 62
  9. அதிரடிக்கணவாய் 64
  10. எமனோடு ஒரு யுத்தம் 70
  11. மரணத்தின் நிறம் பச்சை 74
  12. பழி வாங்கும் புயல் 81
  13. கழுகு வேட்டை 86
  14. இரத்த வெறியர்கள் 90
  15. இரும்புக்குதிரையின் பாதையில் (லயன் செஞ்சுரி ஸ்பெஷல்) 100
  16. பாலைவனப் பரலோகம் (லயன் டாப் 10 ஸ்பெஷல்) 112
  17. மரண முள் 120
  18. நள்ளிரவு வேட்டை 126
  19. மரண நடை 130
  20. கார்சனின் கடந்த காலம் - 1 131
  21. கார்சனின் கடந்த காலம் - 2 132
  22. பாங்க் கொள்ளை (மிஸ்டர் மஹாராஜா ) 133
  23. எரிந்த கடிதம் 140
  24. மந்திர மண்டலம் 150
  25. இரத்த நகரம் 155
  26. எல்லையில் ஒரு யுத்தம் (மில்லென்னியம் சூப்பர் ஸ்பெஷல்) 157
  27. மரண தூதர்கள் 164
  28. மெக்ஸிகோ படலம் 169
  29. தனியே ஒரு வேங்கை 170
  30. கொடூர வனத்தில் டெக்ஸ் 171
  31. துரோகியின் முகம் 172
  32. பயங்கரப் பயணிகள் 173
  33. துயிலெழுந்த பிசாசு 174
  34. பறக்கும் பலூனில் டெக்ஸ் 176
  35. ஓநாய் வேட்டை 178
  36. இருளின் மைந்தர்கள் 179
  37. இரத்த தாகம் 180
  38. சாத்தான் வேட்டை 182
  39. கபால முத்திரை 185
  40. சிவப்பாய் ஒரு சிலுவை (மெகா ட்ரீம் ஸ்பெஷல்) 186
  41. சதுப்பில் ஒரு சதிகார கும்பல் 187
  42. இரத்த ஒப்பந்தம் 191
  43. தணியாத தணல் 192
  44. காலன் தீர்த்த கணக்கு 193
  45. கானகக்கோட்டை (ஜாலி ஸ்பெஷல்) 195
  46. பனிக்கடல்படலம் (கௌபாய் ஸ்பெஷல்) 200
  47. மரணத்தின் முன்னோடி 203
  48. காற்றில் கரைந்த கழுகு 204
  49. எமனின் எல்லையில் 205
  50. சிகப்பாய் ஒரு சொப்பனம் - டெக்ஸ் 215

திகில்[தொகு]

  1. சைத்தான் சாம்ராஜ்யம் (திகில்) 51

காமிக்ஸ் க்ளாசிக்ஸ்[தொகு]

  1. பழி வாங்கும் பாவை 4
  2. தலைவாங்கிக் குரங்கு 27

காமிக்ஸ் எக்ஸ்பிரஸ்[தொகு]

  1. திகில் நகரில் டெக்ஸ் 1
  2. திகில் நகரில் டெக்ஸ் 2

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்ஸ்_வில்லர்&oldid=3214640" இலிருந்து மீள்விக்கப்பட்டது