அவிர்ப்பாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவிர்ப்பாகம் அல்லது ஹவிஸ் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் யாகத்தின் முடிவில் திரண்டுவரும் பலனாகும். [1] இந்த அவிர்பாகமானது தேவர்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும், சிவபெருமானுக்கும் யாகத்தின் முடிவில் சென்று சேருகிறது. இவ்வாறு சேருகின்ற அவிர்ப்பாகத்தினால் தேவர்கள் வலிமை பெறுகின்றார்கள். அதனால் அரக்கர்கள் அவிர்ப்பாகம் கிடைக்காமல் இருக்கச் செய்வதற்காக யாகங்கள் நடைபெறுவதை தடுக்கின்றார்கள் என்பது நம்பிக்கையாகும். [2]

இவற்றையும் காண்க[தொகு]

தாட்சாயிணி

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://218.248.16.19/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=492[தொடர்பிழந்த இணைப்பு] தமிழாய்வு தளம்
  2. பிரம்மாண்ட புராணம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிர்ப்பாகம்&oldid=3232554" இலிருந்து மீள்விக்கப்பட்டது