மண்ணடுக்காய்வு (தொல்லியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்ணடுக்காய்வு என்பது தொல்லியலில் அகழ்ந்தெடுக்கப்படும் தொல்பொருள் கிடைக்கும் மணற்பாலத்தின் ஆழத்தைக் கொண்டு தொல்பொருட்களின் காலத்தைக் கணிக்கும் முறையாகும். கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பும் மண்ணடுக்காய்வும் தொல்லியலில் காலக்கணிப்பின் போது அதிகம் பின்பற்றப்படும் முறையாகும்.[1]

மண்ணடுக்குகள்[தொகு]

ஏதென்சு நகரில் செய்யப்பட்ட அகழாய்வில் காணப்படும் மண்ணடுக்குகளின் தோற்றம்

பழங்கால மக்கள் வாழ்ந்த இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் ஏற்படும் சுற்றுச்சுழல் தன்மைகளுக்கு ஏற்ப மண்ணின் நிறமும் குணங்களும் மாறுபடும். இதனால் முந்தைய காலங்களில் இருந்த மண் பரப்பிற்கும் பிந்தைய காலத்தில் இருந்த மண் பரப்பிற்கும் மாறுபாடுகள் ஏற்படுகிறது. இந்த மண்பரப்புகள் ஒன்றன் மேல் ஒன்றாக படிவதால் மண்ணடுக்குகள் உருவாகின்றன. இம்மணடுக்குகளை அகழாய்வு செய்யும் போது அகழ்குழியில் உள்ள சுவர்களில் மண்ணடுக்குகள் காணப்படுகின்றன. (படம்) இதில் காணப்படும் மண்ணடுக்குகளின் தன்மையோடு அதன் சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் தொல்பொருட்கள் கிடைத்த மண்ணடுக்கையும் ஒப்பிட்டு ஆராய்ந்து தொல்பொருளின் காலத்தை தொல்லியல் வல்லுநர்கள் கண்டறிவர்.

காலம் கணிக்கும் முறை[தொகு]

படத்தில் காட்டப்பட்ட மண்ணடுக்குகளில் தொல்பொருள் கீழுள்ள மண்ணடுக்கில் காணப்படும் எனில் அத்தொல்பொருள் காலத்தால் மிகவும் முற்பட்டது. நடு அடுக்கில் கிடைக்கும் தொல்பொருட்கள் காலத்தால் சிறிது முற்பட்டது. மேலுள்ள மண்ணடுக்கில் கிடைப்பவை காலத்தால் பிற்பட்டது. மூன்று மண்ணடுக்கிலுமே காணப்படும் பொருட்களாஇருப்பின், அப்பொருட்கள் தொடர்ச்சியாக பயன்பாட்டில் இருந்ததுடன் அப்பொருட்களை பயன்படுத்திய சமூகமும் அங்கு பலகாலம் இருந்ததாக கணிக்கப்படும். இவற்றின் காலத்தை சரியாக வரையறை செய்ய பின்வரும் இரண்டு முறைகளை தொல்லியல் வல்லுநர்கள் பின்பற்றுகின்றனர்.

சார்பற்ற மண்ணடுக்காய்வு[தொகு]

இந்த ஆய்வு முறையில் கிடைக்கும் தொல்பொருளின் மண்ணடுக்கு கிடைக்கும் ஆழத்தைக் கொண்டு அதன் காலத்தை கணிப்பர். எடுத்துக்கட்டுக்கு ஒரு தொல்பொருள் அகழாய்வில் பத்து அடி ஆழத்தில் கிடைக்கிறது. ஒரு அடி ஆழத்திற்கு 50 ஆண்டுகள் என வைத்துக் கொண்டால் பத்து அடிகளுக்கு 500 ஆண்டுகள் எனக் கணிக்கப்படும். ஆனால் இம்முறையில் அடிக்கு இத்தனை ஆண்டுகள் என கணிப்பதில் பல பிழைகள் வரக்கூடும். அதை சார்பற்ற மண்ணடுக்காய்வு முறைகளின் மூலம் சரிபடுத்துகின்றனர்.

சார்புடைய மண்ணடுக்காய்வு[தொகு]

மூலம்[தொகு]

  1. ந. அதியமான் (2005). கடல்சார் தொல்லியல். தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். பக். (198-199). </ref>

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://dinamani.com/edition_trichy/article1130097.ece?service=print

உசாத்துணைகள்[தொகு]