நிற அடர்த்தி
நிற அடர்த்தி (colour depth) எனப்படுவது, ஒரு படத்திலுள்ள படச்சில்கள் (pixel) எத்தனை வர்ணங்களைப் பயன்படுத்தி உருவாகின்றன என்பதைக் குறிப்பிடுகிறது[1][2][3][4]. வர்ணங்களது அடர்த்தியானது இலக்கங்களில் கணிக்கப்படுகிறது. இவ் வர்ண வேறுபாடு காட்சிப்படுத்தப்படும் திரையின் வன்பொருள் அல்லது மென்பொருளால் கட்டுப்படுத்தலாம். 1 பிட் என குறிப்பிட்டால் அது இரண்டு வர்ணங்களை மாத்திரம் பயன்படுத்தி அமைக்கப்பட்ட படம். 2 பிட் எனில் 22 = 4 வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்ட படம் என அறியலாம்.
- 1-பிட் = இரண்டு வர்ணங்கள்
- 2-பிட் = நான்கு வர்ணங்கள்
- 4-பிட் = பதினாறு வர்ணங்கள்
- 8-பிட் = 256 வர்ணங்கள்
- 24-பிட் = 16 மில்லியன் வர்ணங்கள்,
24-பிட் வர்ணமே இன்று அதிக அளவில் உள்ளது. 8-பிட் பழைய கைபேசிகளில் பயன்படுத்தப்பட்டது எனினும் இன்றய கைபேசிகளின் திரை 24-பிட் ஆக உள்ளது. பிட் களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதிகளவிலான வர்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது. ஆகையால் தெளிவான காட்சியை பெறலாம் (இங்கு தெளிவான காட்சி என குறிப்பிடுவது படத்தின் தரம் அல்ல படத்திலுள்ள வர்ணத்தின் தரத்தினை மாத்திரமே).
8-பிட் வர்ணம்
[தொகு]8-பிட் வர்ணம் எனில் இலத்திரனியல் திரையில் பயன்படுத்தப்படும் RGB (சிவப்பு-பச்சை-நீலம்) ஆகிய வர்ணங்களைப் பயன்படுத்தி வர்ணத்தை ஏற்படுத்துவதற்காக முறையே (8x8x4 = 256) என பிரிக்கப்படுகிறது. (மனித கண்ணால் சிவப்பு பச்சை வர்ணங்களைக் காட்டிலும் நீல வர்ணத்தை குறைவாகவே அடையாளம் காண முடியும்.)
நிஜ வர்ணம் 24-பிட்
[தொகு]மிகவும் தரமான வர்ணத்தை கொடுக்ககூடியதால் நிஜ வர்ணம் எனப்படுகிறது. இதில் மிகவும் அதிக அளவிலான வர்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது (16 மில்லியன்). 10 மில்லியனுக்கும் அதிகமான வர்ணங்களை மனித கண்களால் இலகுவாக அடையாளம் காணமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழ வர்ணம்
[தொகு]அதி உயர் அடர்த்தி மிக்க வர்ணங்களாக (30/36/48-பிட்) ஆகியவை உள்ளன. இவற்றிற்கும் 24-பிட் இற்கும் இடையிலான வேறுபாட்டினை சாதாரண திரைகளில் இனங்காண முடியாது மிகப் பெரிய திரைகளிலே அரிதாகவே இனங்காண முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ G.J. Sullivan; J.-R. Ohm; W.-J. Han; T. Wiegand (2012-05-25). "Overview of the High Efficiency Video Coding (HEVC) Standard" (PDF). IEEE Transactions on Circuits and Systems for Video Technology. http://iphome.hhi.de/wiegand/assets/pdfs/2012_12_IEEE-HEVC-Overview.pdf. பார்த்த நாள்: 2013-05-18.
- ↑ G.J. Sullivan; Heiko Schwarz; Thiow Keng Tan; Thomas Wiegand (2012-08-22). "Comparison of the Coding Efficiency of Video Coding Standards – Including High Efficiency Video Coding (HEVC)" (PDF). IEEE Trans. on Circuits and Systems for Video Technology. http://iphome.hhi.de/wiegand/assets/pdfs/2012_12_IEEE-HEVC-Performance.pdf. பார்த்த நாள்: 2013-05-18.
- ↑ "High Efficiency Video Coding (HEVC) text specification draft 10 (for FDIS & Consent)". JCT-VC. 2013-01-17 இம் மூலத்தில் இருந்து 2019-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191231032724/http://phenix.it-sudparis.eu/jct/doc_end_user/current_document.php?id=7243. பார்த்த நாள்: 2013-05-18.
- ↑ Alberto Dueñas; Adam Malamy (2012-10-18). "On a 10-bit consumer-oriented profile in High Efficiency Video Coding (HEVC)". JCT-VC இம் மூலத்தில் இருந்து 2013-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130213060530/http://phenix.it-sudparis.eu/jct/doc_end_user/current_document.php?id=6479. பார்த்த நாள்: 2013-05-18.