கபிலர் (திருவள்ளுவமாலைப் பாடல் பாடியவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவள்ளுவமாலை என்னும் நூல் திருவள்ளுவரின் பெருமைகளையும், திருக்குறளின் பகுப்பமைதிகளையும் போற்றிக் கூறும் ஒரு தொகுப்பு நூல், இதில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் பலர் எனக் காட்டப்பட்டுள்ளது.

1050 ஆம் ஆண்டி வாக்கில் ஒரு புலவர் திருவள்ளுவமாலை பாடிப் பல புலவர் பெயரில் பாடல்கள் அடைவாக்கப்பட்டுள்ளன.[1]

கபிலர் பெயரில் அடைவாக்கப்பட்டுள்ள பாடல்

தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

பாடல் சொல்லும் செய்தி:

புல்லின் நுனியில் தினை அளவு சிறிதாகத் தேங்கியுள்ள நீர்த்துளி அருகிலுள்ள மிக உயரமான பனைமரத்தை உள்ளடக்கி நிழலாக்கிக் காட்டுவது போலச் சிறிய திருக்குறள் மிகப் பெரிய பொருளை உள்ளடக்கிக் காட்டுகிறது. வீட்டுக்கோழி வள்ளைக் கொடியில் உறங்கும் அளவுக்கு நீர்வளம் மிக்க நாட்டை ஆளும் அரசே! இதை உணர்ந்துகொள்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005