விண்வெளி அறிவியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விண்வெளி என்பது ஒப்பீட்டளவில், கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கி.மீற்றருக்கு மேலே ஆரம்பமாவதாகக் கொள்ளலாம். விண்வெளி அறிவியல், அல்லது விண்வெளி அறிவியல்கள், பின்வருவன போன்ற பல்வேறு துறைகளை அடக்கியுள்ளது.
- வானியலும், வான்பௌதீகவியலும்
- Exobiology- புறவெளி உயிரியல்
- நுண்ணீர்ப்புச் சூழல் (Microgravity environment)
- பிளாஸ்மா பௌதீகவியல்
- விண்வெளிப் போக்குவரத்து
- ஏவுகணை உந்துகை (Rocket propulsion)
- ஏவுகணை ஏவுதற் தொழில்நுட்பம்
- கோள்களிடைப் பயணம்
- நட்சத்திரங்களிடைப் பயணம் (Interstellar travel)
- விண்கல உந்துகை (Spacecraft propulsion)
- விண்வெளிப் பயணம் (Space exploration)
- ஆளில்லா விண்வெளித் திட்டங்கள் (Unmanned space missions)
- ஆட்களுடனான விண்வெளித் திட்டங்கள் (Manned space missions)
- விண்வெளிக் குடியேற்றம்
இவற்றுடன், விண்வெளி அறிவியல்கள், விண்வெளிச் சூழலிலுள்ள நுண்ணுயி உயிரியலிலிருந்து, மற்றைய கோள்களினதும், விண்பொருட்களினதும் புவிச்சரிதவியல் வரையும்,அதுபோல், நட்சத்திரங்களிடை வெளிகளிலும், நட்சத்திரங்களுள்ளேயும் அணுப் பௌதீகவியலும் போன்ற, வேறு பல துறைகள்மீது தாக்கங் கொண்டோ அல்லது அவற்றுடன் தொடர்புபட்டோ உள்ளன.