நாகனார்
Appearance
நாகனார் என்பவர் சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவர். நல்லந்துவனார் என்னும் புலவர் பாடிய பரிபாடல் ஒன்றுக்கு [1] இவர் இசையமைத்துப் பாடியுள்ளார். அப்பாடலை இவர் பாலையாழ் என்னும் பண் கூட்டிப் பாடிவந்தார். வையை ஆற்றில் மக்கள் நீராடிய முறைமையை இந்தப் பாடல் விரித்துரைக்கிறது.
- இசை கூட்டும் இன்ப அடிகள் சில
- 'வரையன புன்னாகமும்,
- கரையன சுரபுன்னையும்,
- வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்
- மனைமாமரம் வாள்வீரம்,
- சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,
- தாய தோன்றி தீயென மலரா,
- ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,
- வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்
- பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல்
- வயவர் அரி மலர்த் துறை என்கோ? (அடிகள் 16 முதல் 25)
இவற்றில் மரவகைகளின் இயல்பும், இருப்பிடங்களும் வேறுபடுத்தித் தெளிவாக்கப்பட்டுள்ளமை தனிச் சிறப்பாகும்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ பரிபாடல் 11