நாட்டுப்புறவியல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டுப்புறவியல்
நூலாசிரியர்மு. இளங்கோவன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைஇலக்கியம்
வகைகட்டுரை
வெளியீட்டாளர்வயல்வெளிப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2006
பக்கங்கள்160

நாட்டுப்புறவியல் என்ற இந்நூல், முனைவர். மு. இளங்கோவன் அவர்களால் எழுதப்பட்ட நூல் ஆகும்.இந்நூலுக்குப் புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அறிவுநம்பி அணிந்துரை வழங்கியுள்ளார். நூலாசிரியர் வேட்கையுரை, முன்னுரை என்ற இரண்டு தலைப்பில் நூல் குறித்த செய்திகளைப் பதிந்துள்ளார்.

நூலின் சிறப்புகள்[தொகு]

  1. நாட்டுப்புறவியல்
  2. தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு
  3. நாட்டுப்புறப் பாடல் பற்றிய அறிஞர்களின் விளக்கம்/கருத்துகள்
  4. கதைப்பாடல்கள்
  5. நாட்டுப்புறவியலும் மானிடவியலும் என்னும் ஐந்து தலைப்புகளில் நாட்டுப்புறவியல் துறையைப் பற்றிய எளிமையான அறிமுகம் இந்த நூலில் உள்ளது. இளங்கலையில்(Bachelor of Arts) நாட்டுப்புறவியலை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்காக, இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல கல்லூரிகளில் இந்த நூல் பாட நூலாக உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுப்புறவியல்_(நூல்)&oldid=2092320" இலிருந்து மீள்விக்கப்பட்டது