பேச்சு:உடற்கூற்றியல்
உடற்கூற்றியல் எதிர் உள்ளமைப்பியல்[தொகு]
ஒரு தாவரத்தின் உள்ளமைப்புகளான சைலம், ஃப்ளோயம் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். 'anatomy of the plant' என்பதை தாவர உள்ளமைப்பியல் என்று பயன்படுத்துவது எளிமையாக இருக்கிறது. உடற்கூற்றியல் என்ற சொல்லும், இந்த உள்ளமைப்பியல் என்ற சொல்லும் ஒன்று தானே?மயக்கம் நீக்குக.--≈ த♥உழவன் ( கூறுக ) 03:29, 13 சூலை 2013 (UTC)
- உடற்கூற்றியல் என்பது anatomy ஐத் தான் குறிப்பிடுகின்றது. உள்ளமைப்பியல் என்பது உடலின் அகக்கூறுகளை மட்டும் சுட்டுவது போல் ஒரு மயக்கம் வருமல்லவா? இலங்கையில் பொதுப்பயன்பாட்டில் உடற்கூற்றியல் உள்ளது.தமிழ்நாட்டின் பொதுவழக்காய் உள்ளமைப்பியல் இருக்குமாயின் பக்கவழிமாற்று இடலாம். கருத்துக்களை வரவேற்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:53, 8 ஏப்ரல் 2014 (UTC)