ஆதனுங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதனுங்கன் சங்ககால வள்ளல்களில் ஒருவன்.

கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் இவனைப் பாடிய பாடல்கள் 2 புறநானூற்றில் உள்ளன. அவை 175, 389.

ஒருபாடல் “எந்தை! வாழியாதனுங்கன்” என்று தொடங்குகிறது.[1] இதில் புலவர் இவனை “அறத்துறை” என்கிறார்.
உலக இடைக்கழி’ போன்ற அறத்துறை என்கிறார்.
“என் நெஞ்சம் திறக்குநர் நிற் காண்குவரே, நின் யான் மறப்பின், மறக்குங்காலை, என் உயிர் யாக்கையின் பிரியும்’ என்னும் புலவர் வரிகள் நம் நெஞ்சை நெகிழவைக்கின்றன.

மற்றொரு பாடலில்[2] வேங்கட வள்ளல் புல்லி போலக் கொடை வழங்கும்படி ஆதனுங்கனைப் புலவர் வேண்டுகிறார்.

சான்றுக்குறிப்பு[தொகு]

  1. புறம் 175
  2. புறநானூறு 389

வெளியிணைப்பு[தொகு]

என் நெஞ்சில் நினைக்காண்பார் - புறநானூற்றுப்பாடல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதனுங்கன்&oldid=1095706" இலிருந்து மீள்விக்கப்பட்டது