கொல்லிப்பாவை (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்லிப்பாவை முதலிதழ் அட்டை

கொல்லிப்பாவை என்பது 1970 களில் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ராஜமார்த்தாண்டன் ஆவார். இது நவீன இலக்கிய பண்பாட்டு விமர்சனங்களை வெளியிட்டது.

வரலாறு[தொகு]

கொல்லிப்பாவையின் முதல் இதழ் 1976 அக்டோபரில் வெளியானது. இதழுக்கு இந்தப் பெயரைத் தேர்ந்து சொன்னவர் தருமு ஔரூப் சிவராம் என்று ராஜமார்த்தாண்டன் நன்றியுடன் அறிவித்தார். கொல்லிப்பாவை பெரிய அளவில், அதிகமான பக்கங்கள் கொண்ட ‘காலாண்டு ஏடு' ஆக வந்தது. முதல் இதழ் 52 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. இதன் ஒவ்வொரு இதழும் காலதாமதத்துக்காக வருத்தம் தெரிவித்தவாறு வந்தது. இவ்வாறு 1977இல் ஒரே ஒரு இதழைத்தான் வெளியிட முடிந்திருக்கிறது. இரண்டாவது ஆண்டு முதல், கொல்லிப்பாவை கன்னியாகுமரி மாவட்டம், இடையன் விளை என்ற ஊரிலிருந்து வெளி வரத்தொடங்கியது. கொல்லிப்பாவை 1981இல் ஒன்றோ இரண்டோ வெளிவந்தது. 1982 இல் இது வெளிவந்ததாகத் தெரியவில்லை.[1]

இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

குறிப்பு[தொகு]

  1. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 116–122. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லிப்பாவை_(இதழ்)&oldid=3377427" இலிருந்து மீள்விக்கப்பட்டது