ஒருகுடம் தண்ணி ஊத்தி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒருகுடம் தண்ணி ஊத்தி சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி, கதைப்பாட்டு சொல்லிக் கொண்டு விளையாடும் நடிப்பு விளையாட்டு.
விளையாட்டு முறை
[தொகு]இருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி நிற்பவர் கூடிப் பாடும் பாடல் முடியும்போது இடையில் வருபவரைத் தம் கைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொள்வர்.
உரையாட்டு நிகழும்.
பிடித்தவரை விட்டுவிடுவர்.
கூட்டுப்பாடல்:
- ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒருபூ பூத்ததாம்,
- இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்ததாம்,
- ---
- பத்துக்குடம் தண்ணி ஊத்திப் பத்துப் பூ பூத்ததாம்.
(இப்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்)
அடுத்து விடுபடும் பாடல்
- இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சிறிய அளவு கையால் காட்டப்படும்)
- இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சற்றுப் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
- இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (இன்னும் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
அளவு காட்டும் படம் பார்க்க.
விடுவித்துக் கொள்ளும் உரையாடல்
பிடிபட்டவன் சிறுவனாயிருந்தால்,
- உன் பெண்டாட்டி பெயர் என்ன என்பர்.
- அங்குள்ள சிறுமியரின் பெயர்களில் ஒன்றைச் சொல்லவேண்டும்.
எல்லாரும் சிரிப்பர். (அகப்பட்டவனை விட்டுவிடுவர்.)
பிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,
- உன் புருசன் பெயர் என்ன என்பர்.
- அங்குள்ள சிறுவர்களுள் ஒருவன் பெயரைச் சொன்னதும் சிரிப்பர்.
எல்லாரும் சிரிப்பர். (பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார்)
இவற்றையும் பார்க்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
- இ.ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.