பேச்சு:ஒருகுடம் தண்ணி ஊத்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


”இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா” இதற்கு எதிர்பாட்டாக “விடமாட்டேன் பலுக்கா” என்று சொல்லி விளையாடியதாக நினைவு.--சோடாபாட்டில்உரையாடுக 12:41, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]

அன்புள்ள சோடா பாட்டில்! துளுக்கா என்று எழுதும்போது பெரு மனவேதனையுடன் எழுதினேன். பலுக்கா என்னும் பாடத்தைக் காட்டி என் உள்ளத்தைக் குளிரச் செய்துவிட்டீர்கள். திருத்துவிட்டேன். பெரிதும் நன்றி. --Sengai Podhuvan 19:37, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]
இந்த ஓவியங்களைப் பதிவேற்றியதும் ஓவியங்களுக்கு இட்டுள்ள தலைப்பு தொடர்பாகச் சில குறிப்புகள் வருகின்றன. என்ன பிழை செய்கிறேன் எனபது விளங்கவில்லை. உதவுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan 21:18, 12 சூலை 2011 (UTC)[பதிலளி]
ஐயா, “விடுடா துலுக்கா” என்று தான் நாங்களும் விளையாடினோம், “துலுக்கராய்” பிடித்துக் கொண்டவர்கள் சொல்லும் எதிர்ப்பாட்டே “விடமாட்டேன் பலுக்கா” என்பது. சரியாக நினைவில்லை, 1980களின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி யின்றி வாழ்ந்த சில வருடங்களில் சிறுவயதில் விளையாடியது. எனவெ உங்களது முதல் வடிவமே சரியாக இருக்கும் என நம்புகிறேன். (என் குழந்தைப் பருவ நினைவாற்றலை நம்ப வேண்டாம் :-)). முன்பிருந்த உங்கள் வடவத்துக்கே மாற்றி விட்டேன்.
”துலுக்கர்” என்ற சொல் குழந்தைகள் விளையாட்டில் எப்படி புகுந்தது என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. எனினும் நான் என் பெற்றோரிடமிருந்து கேள்விப்படும் வேறு சில விளையாட்டுகளில் ஒளிவு மறைவின்றி சாதி/குழுப்பெயர்களைச் சொல்லிக் கிண்டல் செய்யும் வழக்கமிருப்பதை கண்டுள்ளேன். அதுபோல இதுவும் வந்திருக்கலாம்.
படங்களை வகைப்படுத்தச் சொல்லி (பகுப்பு சேர்க்க) விக்கி பொதுவிலிருந்து குறிப்புகள் வந்திருக்கும், நான் செய்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:58, 13 சூலை 2011 (UTC)[பதிலளி]