Module talk:Main page

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூர்யா, அருமையான முயற்சி. ஆனால் தற்போதைக்கு பழையபடி மீளமைத்துள்ளேன். பின்வரும் சிறிய சிக்கல்கள் உள்ளன. நிரலை மாற்றியோ அல்லது பராமரிப்பாளர்களோடு கலந்துரையாடி தற்போது பழக்கத்திலிருக்கும் வழக்கங்களை மாற்றியோ இதனைக் கையாள வேண்டும்.

1) தற்போது நாம் முதற்பக்க துணை வார்ப்புருகளை under construction போட்டு உருவாக்கி விடுகிறோம். அவை அந்த தேதி வரும் போது தயாராகாது சில சமயம் draft ஆகவே இருக்கும். இபோதுள்ள நிரலில் அப்படியே எடுத்துப் போட்டு விடுமே. எடுத்துக் காட்டு மே 29 வுக்கு ஒரு உ.தெ பக்கம் உருவாக்கி விட்டு அதைப் பாதி நிரப்பி “under construction" போட்டு வைத்து விட்டு மே 29 அன்று வரை விட்டு விட்டால். அன்று முழுமையடையாத அந்தப் பக்கம் அப்படியே முதற்பக்கத்துக்குப் போய் விடும். இதனைத் தவிர்க்க வேண்டும்.

2) வார்ப்புரு தலைப்புகளில் வரும் மாதப் பெயர் வேறுபாடுகள் (ஜூன vs சூன். மார்ச் vs மார்ச்சு, முதலியன). இதற்கு பதிலாக மாத எண்ணிக்கையாகப் (1-12) பெயர் வைத்து மாற்றலாம்.

யோசிப்போம். --சோடாபாட்டில்உரையாடுக 02:59, 27 மே 2013 (UTC)[பதிலளி]

இது தானியங்கி போல் தானே? ஒரு பக்கத்தில் இருந்து தானே அடுத்தடுத்த தலைப்புகளை எடுக்கும்? உதாரணத்திற்கு உ.தெ, தகவல்கள் முழுவதும் நிரம்பியவுடன் தானியங்கி தேர்ந்தெடுக்கும் பக்கத்துக்கு கொண்டு வரலாம் அல்லவா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:45, 27 மே 2013 (UTC)[பதிலளி]

இல்லை தேதி அடிப்படையில் செயல்படுகிறது. எ.கா. இன்றைய தேதியில் தொடங்கி பின்னோக்கி செல்லும். {{வார்ப்புரு:விக்கிப்பீடியாவில்:கட்டுரை/தேதி}} என்று போட்டு விட்டால் தற்போதைய தேதியில் தொடங்கி பின்னோக்கி சென்று எந்தத் தேதி உள்ள தலைப்பில் பக்கம் இருக்கிறதோ அதை எடுத்துக் கொண்டு வந்து சேர்த்து விடும். எ.கா இன்று மே 27, இன்றிலிருந்து தொடங்கி ஒவ்வொரு நாளாகப் பின்னோக்கிப் போகும் மே 25 பக்கம் இருந்தால் ({{வார்ப்புரு:விக்கிப்பீடியாவில்:கட்டுரை/மே 25, 2013}} எடுத்துப் போட்டுவிடும்.--சோடாபாட்டில்உரையாடுக 03:53, 27 மே 2013 (UTC)[பதிலளி]

அப்படி எனில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை எல்லாம் ஒரே பக்கத்தில் வைத்து விடலாம். எண்ணிக்கை 5ஐ தாண்டியபின் அதற்கான பக்கத்தை உருவாக்கினால் போதுமானது. பக்கம் உருவானால் மட்டுமே தான் தானியங்களினால் எடுக்க முடியும் அல்லவா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:25, 27 மே 2013 (UTC)[பதிலளி]

ஆம் அப்படிதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லையெனில். பக்கத்துக்குள்ளேயே draft / ரெடி என்று நிரலுக்கு உணர்த்த ஏதேனும் வழி இருந்தால் கையாளலாம். இது கிட்டவில்லையெனில் நீங்கள் சொன்னது போலவே செய்வோம் அனைத்து பகுதிகளுக்கும். உ.தா மட்டுமல்ல, படம், கட்டுரை, எல்லாவற்றுக்கும், பராமரிப்பவர் அனைவருக்கும் - பார்வதி, நீங்கள், கனக்ஸ், ரவி, சஞ்சீவி, நான், சூர்யா, மணியன், மரு. கார்த்தி என முதற்பக்க வார்ப்புருவில் கைவைக்கும் அனைவருக்கும் சொல்லி விட்டு செய்ய வேண்டும். இவ்வார இறுதிக்குள் மாற்றி விடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:16, 27 மே 2013 (UTC)[பதிலளி]

வணக்கம்! இனிமேல் {{underconstruction}} ஒரு பக்கத்தில் இருந்தால் அந்தப் பக்கம் முதற்பக்கத்திற்குப் போகாது. இந்த மாற்றம் செய்து விட்டேன். Yuvipanda (பேச்சு) 09:56, 28 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றி யுவி :-)--சோடாபாட்டில்உரையாடுக 18:01, 28 மே 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=Module_talk:Main_page&oldid=1737905" இலிருந்து மீள்விக்கப்பட்டது