2022-2023 பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகிஸ்தானின் பணவீக்கத்தை காட்டும் வரைபடம்

2022-2023 பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி என்பது பாகிஸ்தானில் நடந்து வரும் பொருளாதார நெருக்கடியாகும். இது பல மாதங்களாக கடுமையான பொருளாதார சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உணவு[1], எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளது.

அரசியல் நெருக்கடிகள் மற்றும் கடந்த அரசாங்கத்தை அகற்றியதன் மூலம் மோசமான அரசியல் சூழலுக்கு வழிவகுத்தது. உக்ரைன் போர் உலகளவில் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. பல ஆண்டுகளாக பாகிஸ்தான் வாங்கிய அதிகப்படியான வெளிநாட்டுக் கடன்கள் இயல்புநிலையின் அச்சத்தை உயர்த்தியது. இதனால் நாணயம் வீழ்ச்சியடைந்து இறக்குமதிகள் ஒப்பீட்டளவில் விலை உயர்ந்தது. சூன் 2022 இல், பணவீக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்ததுடன் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்தது.[2][3][4]

மோசமான நிர்வாகத்தின் காரணமாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் தனிநபர் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதால், செலுத்தும் சமநிலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நாடு நுகரும் இறக்குமதிகளுக்கு நிதியளிக்க போதுமான அந்நியச் செலாவணியை ஈட்ட முடியவில்லை. [5]

பின்னணி[தொகு]

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் 2018 முடிய தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காட்டும் வரைபடம்

இந்திய மூலோபாய விவகார நிபுணர் சுஷாந்த் சரீனின் கூற்றுப்படி, கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில் பாகிஸ்தான் ஒவ்வொரு ஐந்து வருடங்களில் தனது வெளிநாட்டுக் கடனை இரட்டிப்பாக்கியுள்ளது. அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் ஆட்சியின் தொடக்கத்தில் இருந்த வெளிநாட்டுக் கடன் ரூபாய் 3.06 டிரில்லியன் ஆகும். 2022 இல் இம்ரான் கான் அரசாங்கத்தின் முடிவில் கடன் ரூபாய் 6.25 டிரில்லியன் ஆகும். வெளிநாட்டுக் கடன் ஆண்டுக்கு 14 சதவிகிதம் வளர்ந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, ஆண்டுக்கு சராசரியாக 3 சதவிகிதம் மட்டுமே வளர்ந்து வருகிறது. இதனால் தாங்க முடியாத அளவிற்கு வெளிநாட்டுக் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில், கடன் சுமை ரூபாய் 5.2 டிரில்லியன் ஆகும். இது பாகிஸ்தான் மத்திய அரசின் வருவாயையும் தாண்டியது.[6]

பாக்கிஸ்தானின் பொருளாதார நெருக்கடியானது 2022ல் பிரதமர் டிரில்லியன்புக்கும், அவரது முன்னோடி இம்ரான் கானுக்கும் இடையிலான அரசியல் மோதலின் மையமாக இருந்தது. இது ஏப்ரல் 2022ல் இம்ரான் கானை பிரதம அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற வழிவகுத்தது. தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் நாட்டின் வெளியுறவுக் கொள்கை தவறாகக் கையாள்வதாக செபாஷ் செரீப் குற்றம் சாட்டினார். 2019ம் ஆண்டில் இம்ரான் கான் அனைத்துலக நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயன்றார். மேலும் பணவீக்கத்தை குறைக்க பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உடன்பட்டார். இருப்பினும் இம்ரான் கான் அரசு அனைத்துலக நாணய நிதியத்தின் கடனைப் பெறத் தவறிவிட்டார். மேலும் இராணுவச் செலவைக் குறைத்துக் கொள்ள மறுத்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. உணவுக்காக சண்டையிடும் மக்கள்: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான்
  2. Talat Anwar (12 June 2022). "Economic crisis and default fear". The Express Tribune இம் மூலத்தில் இருந்து 14 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220614131811/https://tribune.com.pk/story/2361264/economic-crisis-and-default-fear. 
  3. "Goods transporters suspend nationwide operations after fuel hike". ARY News. 16 June 2022. Archived from the original on 16 June 2022.
  4. "Food prices soared by up to 30% in Pakistan: WB". The Express Tribune. 7 August 2022.
  5. Khawaja, Haroon (2023-02-27). "Beyond default — Iran via the US". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-27.
  6. Sushant Sareen, Pakistan’s troubles are an opportunity to make it a normal country, Observer Research Foundation, 6 February 2023.

வெளி இணைப்புகள்[தொகு]