(357439) 2004 பிஎல்86

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2004 பிஎல்86 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
(357439) 2004 BL86
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) லிங்கன்புவியருகு விண்பொருட்கள் ஆய்வகம்[1]
கண்டுபிடிப்பு நாள் 30 சனவரி 2004
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் (357439) 2004 BL86
சிறு கோள்
பகுப்பு
அப்போலோ சிறுகோள்கள் பட்டியல், பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள்,
பூமியை அதிகூடி தாக்கக்கூடிய பொருட்கள்
காலகட்டம்2014-டிசம்பர்-09
சூரிய சேய்மை நிலை2.108 விண்வெளி அலகு (Q)
சூரிய அண்மை நிலை 0.8967 AU (q)
அரைப்பேரச்சு 1.502 AU (a)
மையத்தொலைத்தகவு 0.4031
சுற்றுப்பாதை வேகம் 1.84 ஜூலியன் விண்வெளி ஆண்டு
சராசரி பிறழ்வு 354.0° (M)
சாய்வு 23.74 பாகை
Longitude of ascending node 126.7°
Argument of perihelion 311.2°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 0.440–1.000 km (0.3–0.6 mi)
விண்மீன் ஒளிர்மை 19.1

(357439) 2004 பிஎல்86 ((357439) 2004 BL86) எனப்பெயரிடப்பட்ட சிறுகோள் (asteroid) 30 சனவரி 2004ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள லிங்கன் புவியருகு விண்பொருட்கள் ஆய்வகத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.[2] 26 சனவரி 2015 அன்று, பன்னாட்டு நேரப்படி 16.20 மணி அளவில் பூமியைக் கடந்துச் சென்றது.[3] ஏறத்தாழ 680 மீட்டர் குறுக்களவு கொண்ட இந்த விண்கல்லினால் பூமிக்கு பேரிடர் ஏற்பட வாய்ப்பு இல்லை என சிறுகோள்களை ஆய்வு செய்யும் நாசாவின் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.[4]

விண்கல் 2004 BL 86, பூமியிலிருந்து 12 இலட்சம் கி. மீ., தொலைவில் பூமியைச் சுற்றி கடந்து செல்ல உள்ளது. இது பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப் போல மூன்று மடங்கு ஆகும்.

26 சனவரி 2015 அன்று, 2004 BL 86 சிறுகோள் பூமியை அதிகூடிய வேகத்தில் கடந்து செல்லும் போது அமெரிக்காவில் கோல்ட்ஸ்டோன் என்னுமிடத்தில் உள்ள ரேடியோ தொலைநோக்குக் கருவியும், மற்றும் போர்ட்டோரிகோவில் அரசிபோ என்னுமிடத்தில் உள்ள மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப்பும் மைக்ரோ அலைகளை விண்கல் 2004 BL 86 மீது செலுத்தி அதனை ஆராய்ந்து தகவல்களை சேகரிக்க நாஸா முனைந்துள்ளது.

குறுங்கோளுக்கான நிலா[தொகு]

குறுங்கோள் 2004பிஎல்86க்கு ஒரு நிலா அமைந்துள்ளதை நாசா அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.[5]


விண்கல் 2004 BL86

26 சனவரி 2015 அன்று பூமியை கடக்கும் விண்கல் 2004 BL86-இன் பாதையை காட்டும் படம்

மேற்கோள்கள்[தொகு]

  1. (LINEAR)
  2. http://www.minorplanetcenter.net/mpec/K04/K04B80.html
  3. http://ssd.jpl.nasa.gov/sbdb.cgi?sstr=2004BL86;cad=1#cad
  4. http://www.jpl.nasa.gov/news/news.php?release=2015-015
  5. Near asteroid 2004 BL86 has a moon

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=(357439)_2004_பிஎல்86&oldid=3258984" இலிருந்து மீள்விக்கப்பட்டது