1341 கேரள வெள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1341 கேரள வெள்ளம் (1341 Kerala floods) என்பது இன்றைய கேரளாவில் 14 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தை குறிக்கிறது. இந்த நிகழ்வைப் பற்றி எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் எதுவும் இல்லை. இந்த நிகழ்வைப் பற்றிய இன்றைய புரிதல் கொடுங்கல்லூர் - வடபரவூர் பகுதியில் பட்டணம் தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் மற்றும் வைபின் மற்றும் கோட்டை கொச்சி பற்றிய புவியியல் ஆய்வுகளை மையமாகக் கொண்டுள்ளது.[1]

வெள்ளத்தின் போது மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து பெரியாறு வழியாக நீர் ஓடியதால் ஏற்பட்ட அதிகப்படியான வண்டல் பெரியாற்றின் போக்கில் மாற்றத்தையும் பழங்கால இயற்கை துறைமுகமான முசிரிசின் அழிவுக்கும் வழிவகுத்தது என்று பரவலாக நம்பப்படுகிறது.[2] பெருவெள்ளத்தைத் தொடர்ந்து ஆலப்புழா மற்றும் கொடுங்கல்லூர் இடையே உள்ள கரையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது வைபின் தீவு மற்றும் பனங்காடு - கும்பளம் பகுதியில் உள்ள மண் படிவுகள் போன்ற புதிய நிலப்பரப்புகளுக்கும் புத்துயிர் அளித்துள்ளது. கொச்சி துறைமுகம் மற்றும் வேம்பநாட்டின் முகத்துவாரம் உருவாவதற்கு வெள்ளம் ஒரு முக்கிய காரணம் என்று பல வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Anandan, S.; Rajagopal, Shyama (2018-09-29). "Ground Zero | Kerala floods replay the catastrophe that hit the ancient sea port Muziris in 1341" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/kerala/remembrance-of-floods-past/article25074532.ece. 
  2. Tom, Disney (27 August 2018). "flood: After centuries, water almost wiped off Muziris remains" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-09.
  3. "How Periyar's dance of death changed Kerala's landscape". பார்க்கப்பட்ட நாள் 2022-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1341_கேரள_வெள்ளம்&oldid=3885851" இலிருந்து மீள்விக்கப்பட்டது