ஹென்னி பென்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"ஹென்னி பென்னி" ("Henny Penny") ஒரு ஐரோப்பிய நாட்டுப்புறக் கதையாகும். இது உலகம் அழியப் போகிறது என்று நம்பும் கோழியைப் பற்றிய ஒரு திரட்டுக் கதை வடிவில் அமைந்துள்ளது. "வானம் கீழே விழப்போகிறது" என்ற சொற்றொடர், கதையின் முக்கிய அம்சம். இச்சொற்றொடர், "பேரழிவு உடனடியாக நிகழப்போகிறது" என்ற மனப்பிராந்தியான, அல்லது தவறான நம்பிக்கையைச் சுட்டிக்காட்டும் பொதுவான மொழியாக ஆங்கிலத்தில் வழக்கத்திலுள்ளது. இதனையொத்தப் பல கதைகள் 25 நூற்றாண்டுகளுக்கும் முன்பிருந்தே சொல்லப்பட்டு வருகின்றன [1] மேலும் பல்வேறு ஊடகங்களில் தொடர்ந்து "ஹென்னி பென்னி" என்பது குறிப்பிடப்பட்டு வருகிறது.

கதையும் அதன் பெயரும்[தொகு]

"சிக்கன் லிட்டில்" கதைக்கான பட விளக்கம், 1916

இக் கதை, ஆர்னே-தாம்சன்-உதர் வகை 20C என பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் சித்தப்பிரமையையும் மற்றும் வெகுஜன வெறியையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் பன்னாட்டு நாட்டுப்புறக் கதைகள் இடம்பெற்றுள்ளன. [2] இக் கதையின் பல மேற்கத்தியப் பதிப்புகள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது, தன் தலையில் ஒரு காய் விழுந்தபோது, வானமே கீழே விழுவதாக நம்பும் கோழிக்குஞ்சைப் பற்றியது. அக் குஞ்சு இது குறித்து அரசனிடம் முறையிடச் செல்லும் பயணத்தின்போது பல விலங்குகளைச் (பெரும்பாலும் கோழிகள்) சந்திக்கிறது. இந்த கட்டத்திற்குப் பிறகு, வெவ்வேறான கதைகளாகக் கிளைவிட்டு முடிவுகளும் பல்வேறாகக் கொண்டு கதைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. இவற்றுள் ஒரு கதையில் அக்குஞ்சையும் அதனுடன் வந்த கோழிகளையும் ஒரு நரி நைச்சியமாகப் பேசித் தன் குகைக்கு அழைத்தவந்து அவற்றையெல்லாம் தின்று விடுகிறது. வேறொரு கதையின் முடிவில் "காக்கி லாக்கி" என்ற கோழி வெகுநாள் நரியிடமிருந்து தப்பி உயிரோடிருந்து அந்தச் சிறு கோழிக்குஞ்சுக்கு நரியைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது. அதன்மூலம் அக்குஞ்சு தப்பிப் பிழைத்ததாக சொல்லப்படுகிறது. மற்றொரு கதையில் அனைத்துமே நரியிடமிருந்து தப்பி இறுதியாக அரசரிடம் பேசுவதாக அமைகிறது.

காலங்காலமாக, வழிவழியாக வழங்கப்பட்டு வந்தததால் இக்கதையில் வரும் கதைப்பாத்திரங்களின் பெயர்கள் ஓசை நயத்துடன் இடம்பெறலாயின: "சிக்கன் லிக்கன்" அல்லது சிக்கன் லிட்டில்", "ஹென்னி பென்னி" அல்லது "ஹென்னி லென்", "காக்கி லாக்கி", "டக்கி லக்கி", அல்லது "டக்கி டாடில்ஸ்", "டிராக்கி லாக்கி", "கூசி லூசி" அல்லது "கூசி பூசி", "கேண்டர் லேண்டர்", "டர்க்கி லர்க்கி", "பாக்சி லாக்சி" அல்லது "பாக்சி வோக்சி"

ஐக்கிய அமெரிக்காவில் இக் கதையின் பொதுவான பெயர் "சிக்கன் லிட்டில்". இது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து குழந்தைகளுக்கான விளக்கப்பட புத்தகங்களால் சான்றளிக்கப்பட்டது. பிரிட்டன் மற்றும் அதன் பிற முன்னாள் காலனிகளில், இது "ஹென்னி பென்னி" மற்றும் "சிக்கன் லிக்கன்" என்று அறியப்படுகிறது. இதே தலைப்புகளுடன் அமெரிக்காவிலும் வழங்கப்பட்டன.[note 1]

வரலாறு[தொகு]

"ஒரு காலத்தில் "குலுக்" என்றொரு கோழிக்குஞ்சு இருந்தது": இக்கதையின் 1823 ஆம் ஆண்டைய டேனியமொழிப் பதிப்பின் துவக்க வரிகள்.

துவக்கத்தில் இக்கதை வாய்வழி நாட்டுப்புறக் கதையாகத்தான் இருந்துவந்தது. ஐரோப்பிவிற்கு முன்னோடியாக 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிரிம் சகோதரர்கள் அவர்களது செருமானியக் கதைகளை அச்சுப் பதிப்பித்த பின்னரே இக்கதையும் அச்சு வடிவத்திற்கு வந்தது. இவ்வாறு துவக்கத்தில் அச்சில் வெளியான ஒன்று, எசுக்காண்டினாவியாவில் வழங்கப்பட்டு வந்த இக்கதையின் மூலங்களைக் கொண்டு 1823 இல் "ஜஸ்தின் மதியஸ் டிலே" என்பவரால் டேனிய மொழியில் வெளியிடப்பட்டப் பதிப்பாகும். [4] இந்த டேனியப் பதிப்பில் வரும் பெயர்கள்: "கைலிங் குலுக்" (Kylling Kluk).[note 2] "ஹோனே பேனே",[note 3] "ஹனே பெனே",[note 4] "சுவான்ட்",[note 5] "காசே பாசே",[note 6] "ருவேவ் ஸ்கிரவேவ்".[note 7] தலைப்பிடப்படாத இவரது கதையில் கைலிங் குலுக்கின் முதுகில் ஒரு கொட்டை விழுந்து குலுக்கைத் தள்ளிவிட்டுவிட, அது பயந்துபோய் "உலகமே விழுகிறது" என்ற கூவி, அதனுடன் சேர்ந்து பிற கோழிகளையும் பயந்து ஓடவைக்கிறது. "ருவேவ் ஸ்கிரவேவ்" என்ற நரியும் பயந்தது போல நடித்து அவற்றின் பின்னால் ஓடி, காட்டை அடைந்ததும் கோழிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கொன்று தின்றுவிடுகிறது. இக்கதையின் பல்வேறு வடிவங்கள் தோன்றிய பின்புதான் இக்கதை பெஞ்சமின் தோர்ப்பே என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

தி ரிமார்க்கபிள் ஸ்டோரி ஆப் சிக்கன் லிட்டில் (1840) புத்தகத்தின் முதல் பக்கங்கள்

ஆங்கிலத்தில் இக்கதை வரத் துவங்கிய பின்னர், அதன் வெவ்வேறு வடிவங்கள் வெவ்வேறு தலைப்புகளில் தொடர்ந்து வரத் துவங்கின. ஐக்கிய அமெரிக்காவின் மாசச்சூசெட்சிலுள்ள பீட்டர்ஷம் நகரைச் சேர்ந்த விளக்கப்படக் கலைஞரும் மரச் சித்திரக் கலைஞருமான கிரீனே சந்த்லேர் என்பவர் இக்கதையை சித்திரக் கதைப் புத்தகமாக (தலைப்பு: The Remarkable Story of Chicken Little) 1840 இல் பதிப்பித்தார்.[5][6][7] இந்த அமெரிக்கப் பதிப்பில் வரும் கதைப் பாத்திரங்கள் "சிக்கன் லிட்டில்", "ஹென்-பென்", "டக்-லக்", "கூஸ்-லூஸ்", பாக்ஸ்-லாக்ஸ் எனப் பெயரிடப்பட்டிருந்தன. இக்கதையில், சிக்கன் லிட்டிலின் வாலின்மேல் ஒரு இலை விழுந்ததால், அது பயந்துபோனதாக கூறப்பட்டுள்ளது.[8]

சுகாத்து மொழியில், புத்தகப் பதிப்பாளர் இராபர்ட் சேம்பர்சின் (பிறப்பு: 1802) "பிரபல குழந்தைப் பாடல்கள், கணப்பு-அருகே மழலையர் குழந்தைகள் கதைகள், ஸ்காட்லாந்தின் கேளிக்கைகள்" (Popular Rhymes, Fireside Stories, and Amusements of Scotland) புத்தகத்தில் 1842 ஆம் ஆண்டில் இக்கதை முதன்முதலாக வெளியானது.1842.[9] இக்கதை, "கோழிக்குஞ்சும் அதன் உடன் பயணியரும்" என்ற தலைப்பில் "கணப்புக்கருகே மழலையர் கதைகள்" பகுதியில் இணைக்கப்பட்டிருந்தது. கதை பாத்திரங்களின் பெயர்கள்: "ஹென்னி பென்னி", "காக்கி லாக்கி", "டக்கி டாடில்ஸ்", "கூசி பூசி" (நரிக்குப் பெயரில்லை). இக்கதையின்படி ஹென்னி பென்னியின் தலையில் ஒரு பட்டாணிப்பயிறு விழுந்தவுடன் அது "வானகமே கீழே விழுகிறது" ("the lifts were faun") என்று நம்பிப் பயப்படுவதாக கூறப்படுகிறது.

1849 இல் மிகவும் வேறுபட்ட ஆங்கிலப் பதிப்பொன்று "சிக்கன் லிக்கனின் கதை" என்ற தலைப்பில் ஜோசப் ஆர்ச்சர்ட் ஹல்லிவெல் என்பவரால் வெளியிடப்பட்டது[10] இப்பதிப்பில், சிக்கன்-லிக்கனின் வழுக்கையான உச்சிமண்டையில் ஒரு கருவாலிக் கொட்டை விழுந்ததால் அது பயந்து போனதாகக் காட்டப்படுகிறது. இதில் சிக்கன்-லிக்கன் சந்திக்கும் கதைப் பாத்திரத்தின் பெயர்கள்: ஹென்-லென், காக்-லாக், டக்-லக், டிரேக்-லேக், கூஸ்-லூஸ், கேண்டர்-லேண்டர், டர்க்கி-லர்க்கி, பாக்ஸ்-லாக்ஸ்.

இதைத் தொடர்ந்து, 1850 இல் ஜோசப் குந்தல் தொகுத்து வெளியிட்ட குழந்தைகளுக்கானப் புத்தகத் தொகுப்பொன்றில் இக்கதை "தி வொன்டர்புல் ஸ்டோரி ஆப் ஹென்னி பென்னி" என்ற தலைப்புடன் இடம்பெற்றது..[11]

டேனிய மொழியிலிருந்து பெஞ்சமின் தோர்ப்பேயின் ஆங்கில பொழிபெயர்ப்பு 1853 ஆம் ஆண்டு "சிறு கோழிக்குஞ்சு குலுக்கும் அதன் கூட்டாளிகளும்" ("The Little Chicken Kluk and his companions") என்ற தலைப்பில் வெளியானது.[12] இதில் வரும் பெயர்கள் எல்லாம் கிட்டத்தட்ட சேம்பர்சின் சுவாத்து மொழிப் பதிப்பில் உள்ளதுபோலவே இருந்தன.

இக்கதையின் வெவ்வேறு பதிப்புகளை ஒப்பிடும்போது சுவாத்து, ஆங்கிலப் பதிப்புகளில் கோழிக்குஞ்சும் அதனுடனுள்ளவையும் வானம் விழப்போகிறது என்பதை அரசரிடம் கூற விழைகின்றன. அமெரிக்க, டேனியப் பதிப்புகளில் இத்தகைய குறிப்பிட்ட நோக்கம் எதுவும் காணப்படவில்லை. எல்லாப் பதிப்புகளிலும் அவை நரியால் ஏமாற்றப்பட்டு கொன்று தின்னப்படுகின்றன.

மரபுத்தொடராகப் பயன்பாடு[தொகு]

Title page of The Remarkable Story of Chicken Little

"சிக்கன் லிட்டில்" மற்றும் கதையின் முக்கியத் தொடரான "வானம் கீழே வீழ்கிறது" என்பதும் தகுந்த காரணமின்றி பயப்படுபவர்கள், தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அச்சத்துக்குள்ளாக்குபவர்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

காரணமேயில்லாமல் பேராபத்து வரப்போவதாக முன்கூட்டியே எச்சரிப்பவர்களைச் சுட்டிக்காட்டுவதற்கு "சிக்கன் லிட்டில்" என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது முதன்முதலாக 1895 இல் "மெரியம் வெப்ஸ்டர் அகராதி"யில் பதிவு செய்யப்பட்டது.[13] எனினும் இதற்கு முன்னரே இதன் மரபுத்தொடர் பயன்பாடு துவங்கிவிட்டது. 1840 இல் சந்த்லேரின் சித்திரக் கதை வெளியீட்டைத் தொடர்ந்து இவற்றின் மரபுத்தொடர் பயன்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.. 1842 இல் எயிட்டி அரசைப் பற்றி ஒரு இதழில் வெளியானக் கட்டுரை ஒன்றில் "சிக்கன் லிட்டில்" காணப்படுகிறது.[14] 1844 ஆம் ஆண்டு ஜூலை 4, ஐக்கிய அமெரிக்க சுதந்திர நாளன்று பாஸ்டனில் நிகழ்த்தப்பட்ட உரையில் "சிக்கன் லிட்டில்", "வானம் வீழ்கிறது" ஆகிய இரண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன. [note 8].[15]

குறிப்புகள்[தொகு]

  1. Before Lightnin' Hopkins' "Henny Penny Blues" from the 1940s, there was a 1906 comic strip version.[3] A more recent instance is the Golden Girls' TV skit titled "Henny Penny" (1991). The Yale Book of Quotations cites the nursery tale "Chicken Licken" as the source for 'the sky is falling' and the character is mentioned in John Cheever's short story "The 5.48".
  2. Kylling means "chick" (baby chicken); Kluk is an onomatopoeic representation of a chicken's vocalization, similar to English "cluck"
  3. Høne means "hen"; Pøne means "penny"
  4. Hane means "cock"/"rooster"
  5. And means "duck"
  6. Gaase (modern Danish Gåse) means "goose"
  7. Ræv means "fox"
  8. To hear their harangues on the eve of the election, one would suppose that the fable of Chicken Little was about to become a truth, and that the sky was actually falling

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jataka Tales of the Buddha, Part III, retold by Ken & Visakha Kawasaki". பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
  2. The End of the World The Sky Is Falling, folktales of Aarne-Thompson-Uther type 20C (including former type 2033), in which storytellers from around the world make light of paranoia and mass hysteria, selected and edited by D. L. Ashliman, 1999
  3. C365 in the Opie Collection. "List of Fairy Tale Books in the Opie Collection", Opie Collection of Children's Literature, Bodleian Library (bodleian.ox.ac.uk), revised 1994. Retrieved 1 May 2015.
  4. Thiele, J. M. (1823). Danske folkesagn. 4. Copenhagen: A. Seidelin. பக். 165–167. இணையக் கணினி நூலக மையம்:458278434. http://hdl.handle.net/2027/hvd.hwslqu?urlappend=%3Bseq=185. 
  5. Chandler, John Greene (1840). The Remarkable Story of Chicken Little. Roxbury, MA: J.G. Chandler. இணையக் கணினி நூலக மையம்:191238925. 
  6. "Chicken Little – A View at the Bicentennial". Archived from the original on 2015-09-18. பார்க்கப்பட்ட நாள் 2014-10-21.
  7. Chandler, John Greene. "Self-Portrait" – via arcade.nyarc.org Library Catalog.
  8. The text of the story is reprinted in Fowle, William Bentley (1856). The Mind and Heart, Or, School and Fireside Reading for Children. Boston, MA: Morris Cotton. பக். 121–122. இணையக் கணினி நூலக மையம்:27730411. https://books.google.com/books?id=7BQtAAAAYAAJ. 
  9. Chambers, Robert (1842). Popular Rhymes, Fireside Stories, and Amusements of Scotland. Edinburgh: William and Robert Chambers. பக். 51–52. இணையக் கணினி நூலக மையம்:316602150. https://books.google.com/books?id=5dpWAAAAcAAJ&pg=PA51. 
  10. Halliwell, James Orchard (1849). Popular rhymes and nursery tales: a sequel to the Nursery rhymes of England. London: John Russell Smith. பக். 29–30. இணையக் கணினி நூலக மையம்:3155930. https://archive.org/details/popularrhymesan00hallgoog. 
  11. "The Treasury of pleasure books for young children". W.G. Baker. 1 January 1850 – via Google Books.
  12. Thorpe, Benjamin, தொகுப்பாசிரியர் (1853). Yule-Tide Stories: a collection of Scandinavian and North German popular tales and traditions. London: Henry G. Bohn. பக். 421–422. இணையக் கணினி நூலக மையம்:877309110. https://books.google.com/books?id=B24AAAAAMAAJ. 
  13. Merriam-Webster Dictionary. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780877798095. https://books.google.com/books?id=TAnheeIPcAEC&q=chicken+little+++%221895%22&pg=RA1-PA213. பார்த்த நாள்: 19 September 2014. 
  14. "Life in Hayti", in The Knickerbocker, or New York monthly magazine, volume xix. New York: John Bisco. 1842. பக். 454. https://archive.org/details/knickerbockeror89unkngoog. :"In the words of an infantile philosopher, yclept 'Chicken Little', how can he help knowing it?"
  15. Chandler, Peleg W. (1844). The Morals of Freedom: An Oration delivered Before the Authorities of the City of Boston July 4, 1844. Boston, MA: John H. Eastburn. பக். 29. இணையக் கணினி நூலக மையம்:982157. https://archive.org/details/moralsoffreedomo00chan. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்னி_பென்னி&oldid=3655933" இலிருந்து மீள்விக்கப்பட்டது