உள்ளடக்கத்துக்குச் செல்

ஹில்ஃபோர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹில்ஃபோர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
அமைவிடம்
தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி
இந்தியா
தகவல்
தொடக்கம்2008
அதிபர்கே. சந்தியா

ஹில்ஃபோர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (Hillfort Matriculation Higher Secondary School, Kotagiri ) என்பது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளி ஆகும்.[1] இப்பள்ளியானது அன்னை மாணிக்கம்மாள் அறக்கட்டளையின்கீழ் டாக்டர் தோ. ரவிக்குமார் என்பவரால் 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி 2014 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்தது. மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக இப்பள்ளியில் தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், அறிவியல் மன்றம், சாரணர் இயக்கம், தேசிய பசுமைப் படை போன்றவை செயல்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டு கால்பந்து, கைப்பந்து அணிகளில் இப்பள்ளி மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோத்தகிரி ஹில்ஃபோர்ட் பள்ளியில் கைப்பந்து இறுதிப் போட்டி". செய்தி. தினமணி. 19 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 13 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)