வேணுகோபால சுவாமி கோயில், கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேணுகோபால சுவாமி கோயில், கணபதி[1]
பெயர்
புராண பெயர்(கள்):அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், கணபதி
பெயர்:வேணுகோபால சுவாமி கோயில், கணபதி[1]
அமைவிடம்
ஊர்:கணபதி
மாவட்டம்:கோயம்புத்தூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வேணுகோபால சுவாமி
உற்சவர்:ருக்மணி, சத்யபாமா உடனுறை வேணுகோபால சுவாமி
தாயார்:செங்கமலவள்ளி
உற்சவர் தாயார்:ருக்மணி, சத்யபாமா
சிறப்பு திருவிழாக்கள்:மார்கழி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, நவராத்திரி திருவிழா, புரட்டாசி சனிக்கிழமைகள் சிறப்பு பூஜைகள், பவுர்ணமி சத்யநாராயண பூஜை, வரலட்சுமி நோன்பு, கிருஷ்ணருக்கு திருக்கல்யாணம், பிரம்மோற்சவம், ஆடிப் பூரம்
வரலாறு
தொன்மை:1000 ஆண்டுகள்
அமைத்தவர்:யாதவ வம்சத்து மகாராஜா

அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில், கணபதி அல்லது வேணுகோபால சுவாமி திருக்கோயில், கணபதி[1] இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணபதி ஊரில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலின் முன் பகுதியில் அமைந்துள்ள கோட்டை கணபதி (விநாயகர்) சன்னதியை வைத்தே இவ்வூர் 'கணபதி' என்று அழைக்கப்பட்டு வருவதாக வரலாறு.[சான்று தேவை]

கோயில் வரலாறு[தொகு]

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மைசூரை ஆண்ட யாதவ வம்சத்தைச் சேர்ந்த மகாராஜா, இவ்வூர் மக்களுக்கு சாசனம் செய்து கொடுத்து, இக்கோயிலையும் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.[சான்று தேவை] மாதையா உடையார் வம்சத்தைச் சேர்ந்த அரசர் இக்கோயிலை புனருத்தாரணம் செய்ததாகக் கல்வெட்டுகளில் காணப்படுவதாக வரலாறு.[சான்று தேவை]

கோயில் திருவிழாக்கள்[தொகு]

இக்கோயிலில், பிரதி மாதம் பவுர்ணமி சத்யநாராயண பூஜை, பிரதி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் சிறப்புப் பூஜைகள், மார்கழி உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, நவராத்திரி திருவிழா, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் சிறப்புப் பூஜைகள், ஆடி வெள்ளி வரலட்சுமி நோன்பு (மகாலட்சுமி தாயாருக்கு பூஜை), ஆடிப் பூரம், உரியடி விழா, மூல நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் சிறப்புப் பூஜைகள் ஆகியவை முக்கியத் திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

முக்கிய சன்னதிகள்[தொகு]

செங்கமலவள்ளி (மகாலட்சுமி) தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, அனுமன் சன்னதி, மூல கருடன் சன்னதி, ஆழ்வார்கள் சன்னதி, நவக்கிரக சன்னதி, விநாயகர் சன்னதி ஆகிய முக்கிய சன்னதிகள் உள்ளன.

அமைவிடம்[தொகு]

இக்கோயில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 'கணபதி' என்ற பெயர் கொண்ட ஊரின், பேருந்து நிறுத்தத்திலிருந்து சங்கனூர் நகருக்குச் செல்லும் வழியில், சில மீட்டர்கள் தூரத்தில அமைந்துள்ளது. இதன் புவியியல் ஆள்கூறுகள்: 11°02'10.2"N 76°58'34.4"E (11.036159°N 76.976232°E). கடல் மட்டத்திலிருந்து சுமார் 444 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது, இக்கோயில்.

பயன்பெறும் நகர, ஊர்கள்[தொகு]

கோயம்புத்தூர், கணபதி, சங்கனூர், மணியகாரம்பாளையம், நல்லாம்பாளையம், கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி, துடியலூர், இரத்தினபுரி, ஆவாரம்பாளையம் ஆகிய ஊர்களிலுள்ள மக்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

சாலைப் போக்குவரத்து[தொகு]

சத்தி சாலை, சங்கனூர் சாலை முதலிய சாலைகள் இக்கோயிலை கோயம்புத்தூர் நகருடன் இணைக்கின்றன.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

விமானப் போக்குவரத்து[தொகு]

அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Tamilnadu Temple>வேணுகோபால சுவாமி". Dinamalar.