வெ. ந. முத்தமிழ்ச் செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெ. ந. முத்தமிழ்ச் செல்வன் (V. N. Muthamilselvan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடியினைச் சேர்ந்தவர். இவர் இலால்குடி மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியிலும் திருச்சிராப்பள்ளி ஜோசப் கல்லூரிப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பினை முடித்துள்ளார். முத்தமிழ்ச் செல்வன், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 இலால்குடி திமுக 40213 52.2[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 198. {{cite book}}: More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.