வெள்ளுற்று பெருமாள் கோவில்
Appearance
வெள்ளூற்றுப் பெருமாள் கோவில் சேலம் மாவட்டத்தின், இடைப்பாடி பகுதியில் உள்ள புராதன கோவிலாகும். இந்தக் கோவிலில் சுயம்பு வடிவில் பெருமாள், ஆஞ்சநேயர், விநாயகர், கருடாழ்வார் சன்னதிகள் அமைந்துள்ளன. இது சூரிய மலை அடிவாரத்தில் உள்ளது.
வரலாறு
[தொகு]இந்தக் கோவில் குறித்த வரலாறு அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் பாண்டவர்கள் இந்த வனத்தில் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இங்கு நாமக்கட்டியும் குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பயணம்
[தொகு]இந்தக் கோவிலுக்கு இடைப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து அரை மணி நேரத்தில் செல்லலாம். இந்தக் கோவிலுக்கு இரண்டு சக்கர வாகனத்திலோ நான்கு சக்கர வாகனத்திலோ செல்லலாம். கோவிலுக்கு செல்ல பேருந்து வசதி கிடையாது.
பூசைகள்
[தொகு]- புரட்டாசி மாதத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. [1]
- பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணி முதல் அபிசேக ஆராதனை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.
படங்கள்
[தொகு]தொடர்புடைய பக்கங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.