வெள்ளீயம்(IV) அயோடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளீயம்(IV) அயோடேட்டு
Tin(IV) iodate
இனங்காட்டிகள்
57232-85-6 Y
பண்புகள்
Sn(IO3)4
வாய்ப்பாட்டு எடை 818.29
தோற்றம் நிறமற்றது. நெடுவரிசை படிகம்
அடர்த்தி 5.107 கி·செ.மீ-3(23 °செல்சியசு)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வெள்ளீயம்(IV) அயோடேட்டு (Tin(IV) iodate) என்பது Sn(IO3)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். முதன்முதலில் 2020 ஆம் ஆண்டில் வெள்ளீயம்(II) ஆக்சைடுடன் நீரில் கரைக்கப்பட்ட அயோடிக் அமிலத்தைச் சேர்த்து 220 ° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் நீர் வெப்ப வினை மூலம் வெள்ளீயம்(IV) அயோடேட்டு உருவாகிறது. வெள்ளீயம்(IV) அயோடேட்டு நிறமற்றதாக உள்ள ஒரு நெடுவரிசை படிகமாகும். P1 என்ற இடக்குழுவில் முச்சரிவச்சுப் படிக அமைப்பில் இது படிகமாகிறது.[1] வெள்ளீயம்(IV) அயோடேட்டு மறைமுக ஆற்றல் இடைவெளியைக் கொண்டுள்ளது. சோதனை முறையில் 4.0 எலக்ட்ரான் வோல்ட்டு என்றும் அளவீட்டு முறையில் 2.75 எலக்ட்ரான் வோல்ட்டு என்றும் ஆற்றல் இடைவெளி குறிப்பிடப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Luo, Min; Liang, Fei; Hao, Xia; Lin, Donghong; Li, Bingxuan; Lin, Zheshuai; Ye, Ning (2020-03-24). "Rational Design of the Nonlinear Optical Response in a Tin Iodate Fluoride Sn(IO 3 ) 2 F 2" (in en). Chemistry of Materials 32 (6): 2615–2620. doi:10.1021/acs.chemmater.0c00196. பன்னாட்டுத் தர தொடர் எண்:0897-4756. https://pubs.acs.org/doi/10.1021/acs.chemmater.0c00196. 
  2. Liang, Akun; Rodriguez-Hernandez, Placida; Muñoz, Alfonso; Rahman, Saqib; Segura, Alfredo; Errandonea, Daniel (2021). "Pressure-dependent modifications in the optical and electronic properties of Fe(IO 3 ) 3 : the role of Fe 3d and I 5p lone–pair electrons" (in en). Inorganic Chemistry Frontiers 8 (22): 4780–4790. doi:10.1039/D1QI00870F. பன்னாட்டுத் தர தொடர் எண்:2052-1553. http://xlink.rsc.org/?DOI=D1QI00870F. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளீயம்(IV)_அயோடேட்டு&oldid=3941805" இலிருந்து மீள்விக்கப்பட்டது