வெளி வானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆழமற்ற வானம் அல்லது வெளி வானம் (Shallow sky) என்பது சில வேளைகளில் தொழில்சாரா வானியலாளர்களால் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஆழமான வானம் அல்லது உள் வானத்திற்கு எதிர்ச் சொல்லாக இச்சொல் பயனாகிறது. நமது பூமியைச் சுற்றியுள்ள மற்றும் சூரிய மண்டலத்திற்கு உள்ளேயும் காணப்படும் வளிமண்டலத்தை ஆழமற்ற வானம் அல்லது வெளிவானம் எனலாம். சூரிய கிரகணம், சந்திர கிரகணம், கிரக இணைப்புகள் போன்ற வானத்தில் நிகழும் தோற்றப்பாடுகளும் ஒளிவட்டம், வானவில் மற்றும் மின்னும் மேகங்கள் போன்ற வளிமண்டல நிகழ்வுகளும் வெளிவானத்தில்தான் நடைபெறுகின்றன.

1986 முதல் 2000 வரையிலான காலத்தில் சிடிபன் சிமித் வெளி வானம் செய்தியிதழை வெளியிட்டார். புதியதாக கண்டுபிடிக்கப்படும் பிரகாசமான வால்மீன்கள் பற்றிய செய்திகள் மற்றும் காணத்தக்க வால்மீன்கள் பற்றிய தினசரி நிலைகள் ஆகியவற்றைப் பரப்புவதற்காக வால் நட்சத்திரம் விரைவு அறிவிப்பு சேவை என்று ஓர் அமைப்பை இயக்கினார். வால் நட்சத்திர அட்டவணைகள் பொதுவாக 10 நாட்கள் இடைவெளியில் வெளியிடப்படுவது பொதுவான நடைமுறையாக இருந்தது. ஆனால் வெளி வானம் செய்தியிதழ் வெளியிட்ட அட்டவணைகள் ஒருநாள் இடைவெளியில் காணப்பட்ட அமைப்புகளாக இருந்தன. வெளி வானம் செய்தி இதழும் வால் நட்சத்திரம் விரைவு அறிவிப்பு சேவையும் இயங்கிய 14 ஆண்டுகளில் காண்பதற்கு கிடைத்த அனைத்து வால் நட்சத்திரங்கள் பற்றியும் சந்தாதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு சிமித்சோனியன் வானியற்பியல் ஆய்வகத்தின் சிறிய கோள் மையம் வெளியிட்ட சிறிய கோள்கல் சுற்றறிக்கை / சிறிய கிரகங்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் ஏப்ரல் 13 வெளியீட்டில் சிடீவன் சிமித்தின் பணி கெளரவிக்கப்பட்டது. அதன் பொருட்டு 9891 என்ற சிறிய கிரகத்திற்கு சிடிபன்சுமித் பெயர் சூட்டப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளி_வானம்&oldid=2746703" இலிருந்து மீள்விக்கப்பட்டது