வென் ஜியாபாவோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனாப் பிரதமர் வென் ஜியாபாவோ

வென் ஜியாபாவோ (ஆங்கிலம்:Wen Jiabao) (பிறப்பு 19 செப்டம்பர் 1942) சீனாவின் தற்போதைய பிரதமர் ஆவார். பதவியின் அடிப்படையில் இவரே சீன மக்கள் குடியரசின் அதிகாரபூர்வ தலைவர். ஜியாபாவோ அடிப்படையில் நிலவியல் மற்றும் பொறியியல் துறையை பின்புலமாக கொண்டவர். 1968 ஆம் ஆண்டில் பீஜிங் நிலவியல் கல்விமையத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து கன்சு மாகாணத்தில் பணிபுரிந்த வென் சில ஆண்டுகளில் அரசியலுக்குள் நுழைந்தார். ஜாவோ ஜியாங் போன்ற தலைவர்களுடன் சேர்ந்து 1989 ஆம் ஆண்டு தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றார். 1998 ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டுவரை ஜூ ரோங்ஜி பிரதமராக இருந்த காலகட்டத்தில் சீனாவின் துணை பிரதமர் (Vice Premier of the People's Republic of China) ஆக இருந்தார். இந்த கால கட்டத்தில் இவர் விவசாயம் மற்றும் நிதி இலாகாக்களை கவனித்தார். 2003 ஆம் ஆண்டில் சீனாவின் பிரதமராக பதவியேற்றார். சில உலகலாவிய ஊடகங்களாலும், சீன மக்களாலும் இவரை 'மக்களின் பிரதமர்' (the people's premier) எனப் புகழ்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வென்_ஜியாபாவோ&oldid=3850975" இலிருந்து மீள்விக்கப்பட்டது