வி.என்.புருசோத்தமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
V.N. Purushottaman
பணிஅரசியல் தலைவர்

 

வான்மேரி நடேயி புருஷோத்தமன் (Vanmeri Nadeyi Purushothaman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிரெஞ்சு இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தின் மாகேவிலுள்ள பள்ளூரில் பிறந்தார். இந்திய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார். முப்பத்தைந்து ஆண்டுகளாக மாகேவிலிருந்து இருந்து பலமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 1964 மற்றும் 1968 ஆம் ஆண்டுக்கிடையில் பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் துணை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார் [2] :968மாகேவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியின் போது அவர்களுக்கு எதிராகப் போராடியதால் இவருக்கு சுதந்திரப் போராட்ட வீரர் என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது. இவர் பிரெஞ்சு மொழியை ல் நன்கு அறிந்தவர் எனப் புகழ் பெற்றார்.

மாகே நகராட்சியின் கடைசி நகரத் தந்தை என்றும் முதல் தலைவர் தலைவர் என்றும் இவர் சிறப்பு பெற்றார். கே.வி.சினதாசு, என்.கே.மித்ரன் மற்றும் சிறீ வல்சன் ஆகிய மகன்களும், மேலும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1964 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PONDICHERRY பரணிடப்பட்டது 27 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
  2. "Union Territory of Pondicherry".

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி.என்.புருசோத்தமன்&oldid=3823717" இலிருந்து மீள்விக்கப்பட்டது