வியாசர்பாடி விநாயக முதலியார் சித்திர சத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியாசர்பாடி விநாயக முதலியார் சித்திர சத்திரம் தமிழ்நாடு மயிலை தெற்கு குளக்கரையில் அமைந்துள்ள சத்திரமாகும்.[1]இதனை சென்னை வியாசர் பாடியில் வாழ்ந்த விநாக முதலியார் 1852ல் அமைத்தார். இவர் சோழியவெள்ளாள மரபினைச் சார்ந்தவராவார்.

இச்சத்திரம் கபாலீசுவரர் கோயில் பக்தர்களுக்கும், மக்களுக்கும் அன்னதானம் செய்வதற்காக அமைக்கப்பட்டது. உடன் இச்சித்திர சத்திரத்தில் எண்ணற்ற சுவர் ஓவியங்களும், பொம்மைகளும் காணப்படுகின்றன.

இச்சித்திர சத்திரம் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலின் பங்குனித் திருவிழாவிலிருந்து கபாலீசுவரர் திருக்கல்யாணம் வரை மட்டுமே திறந்திருக்கிறது. மற்ற நாட்களில் பூட்டிக் கிடக்கிறது. இச்சித்திர சத்திரத்தில் கற்பகாம்பாள் மயிலாக மாறி ஈசனை வணங்கியது, திருஞான சம்பந்தர் கோயிலில் பதிகம் பாடி பூம்பாவை எனும் பெண்ணை சாம்பலில் இருந்து உயிர்தந்தது, கண்ணன் சிறு வயதில் கோகுலத்தில் செய்த குறும்புகள் போன்ற ஓவியங்களும் காணப்படுகின்றன.

இந்து சமயத்தின் தொன் நம்பிக்கைகளான புண்ணியம் செய்தவர்கள் திருக்கைலாயம் செல்லுதல், பாவம் செய்வர்கள் நரகத்திற்கு செல்லுதல் அங்கு கிடைக்கின்ற தண்டனைகள் போன்றவையும் ஓவியங்களாக உள்ளன.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. அன்னத்தோடு அறமும் வளர்க்க ஒரு சத்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]