வியட்நாம் பெண்கள் நினைவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியட்நாம் பெண்கள் நினைவகம்
Vietnam Women's Memorial
அமைவிடம்தேசிய மால்
வாசிங்டன், டி. சி.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
நிறுவப்பட்டது1993
நிருவாக அமைப்புதேசிய பூங்கா சேவை

வியட்நாம் பெண்கள் நினைவகம் (Vietnam Women's Memorial) என்பது வியட்நாம் போரில் பணியாற்றிய அமெரிக்காவின் செவிலியர்கள் மற்றும் பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னமாகும். [1] [2] ஒரு காயமுற்ற சிப்பாயுடன் மூன்று சீருடை அணிந்த பெண்கள் இருப்பதைச் சித்தரிக்கிறது [2] செவிலியர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், தகவல் தொடர்பு வல்லுநர்கள் போன்ற பெண்கள் போரில் ஆற்றிய முக்கிய பணிகளை நினைவூட்டுவதாகவும் அவர்களுக்கான ஆற்தலை அளிப்பதாகவும் உள்ளது.[3] இது வியட்நாம் படைவீரர் நினைவகத்தின் ஒரு பகுதியாகும். வாசிங்டன் டி.சி இல் உள்ள தேசிய மாலில் அந்நினைவகத்திற்குத் தெற்கிலும் பிரதிபலிப்பு குளத்தின் வடக்கிலும் அமைந்துள்ளது. [1]

ஒரு முன்னாள் இராணுவ செவிலியராக இருந்த டயான் கார்ல்சன் இவான்சு 1984 ஆம் ஆண்டு வியட்நாம் பெண்கள் நினைவகத் திட்டத்தை (தற்போது வியட்நாம் மகளிர் நினைவு அறக்கட்டளை) நிறுவினார். [1] [2] இந்த நினைவுச்சின்னம் கிளென்னா குடாக்ரே [4] என்பவரால் வடிவமைக்கப்பட்டது மற்றும் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வியட்நாம் படைவீரர் நினைவுச்சின்னத்தின் ஒரு பகுதியாக அர்ப்பணிக்கப்பட்டது [1] [5]

இந்த நினைவுச்சின்னம் துல்லியமற்றது என்று விவரிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது போன்ற முதன்மை பராமரிப்பு அமெரிக்க இராணுவ மருத்துவர்கள் மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்களால் மட்டுமே வழங்கப்படுகிறது. இராணுவ மருத்துவமனைகளில் பிரத்தியேகமாகப் பணிபுரியும் செவிலியர்கள் மட்டுமே இத்தகைய மருத்துவ சேவையை வழங்குகிறார்கள். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Schmitt, Eric. "A Belated Salute to the Women Who Served." New York Times. Late ed. November 12, 1993. 1+.
  2. 2.0 2.1 2.2 Biggins, Virginia. "Memorial to commemorate women in Vietnam War." Daily Press [Newport News, VA]. August 6, 1992.
  3. "Reflect at the Vietnam Women's Memorial (U.S. National Park Service)". www.nps.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  4. Haederle, Michael. "For the Forgotten." Los Angeles Times. April 29, 1992. E1+.
  5. "Vietnam Women's Memorial". www.vietnamwomensmemorial.org. Archived from the original on 2020-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-12-26.
  6. Kulik, Gary (2009). 'War Stories': False Atrocity Tales, Swift Boaters, and Winter Soldiers – What Really Happened in Vietnam. Potomac Books. பக். 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1597976377. https://archive.org/details/warstoriesfalsea0000kuli. 

புற இணைப்புகள்[தொகு]