விமலா வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விமலா வர்மா (Vimla Verma)(பிறப்பு 1 சூலை 1929) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சமூக சேவகரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக மத்தியப் பிரதேசத்தில் உள்ள சியோனி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

இளமை[தொகு]

விமலா மகாராட்டிரா மாநிலம் நாக்பூரில் 1929ஆம் ஆண்டு சூலை 1 ஆம் தேதி பிறந்தார். விமலா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.[1]

பணி[தொகு]

  • கல்விக் குழு, சியோனி
  • கலைக் கல்லூரி, சியோனி
  • மத்தியப் பிரதேச மாநில சமூக நல வாரியம்

1963 முதல், விமலா அகில இந்தியத் தேசிய காங்கிரசு குழுவின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இவர் 1991ல் 10வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-ல், இவர் 12வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விமலா கெளரவ விரிவுரையாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[1] இவர் விவசாயி, ஆசிரியர் மற்றும் கல்வியாளர் ஆவார்.

வகித்த பதவிகள்[தொகு]

  • 1963-67 - மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மகளிர் காங்கிரசு, மத்தியப் பிரதேசம்; தலைவர், மாவட்ட காங்கிரசு, மத்திய பிரதேசம்
  • 1963 - உறுப்பினர், அகில இந்தியத் தேசிய காங்கிரசு
  • 1967-90 - உறுப்பினர், மத்தியப் பிரதேச சட்டமன்றம்
  • 1967-68 - உறுப்பினர், பொதுக் கணக்குக் குழு
  • 1967-69 - பொதுச் செயலாளர், பிரதேச காங்கிரசு குழு, மத்தியப் பிரதேசம்
  • 1969-72 - மாநில, நீர்ப்பாசனம் மற்றும் மின்துறை அமைச்சர், மத்தியப் பிரதேசம்
  • 1972-75 - மாநில சுகாதார அமைச்சர், மத்தியப் பிரதேசம்
  • 1977-80 - பொதுச் செயலாளர், பிசிசி, மத்தியப் பிரதேசம்
  • 1979-80 - உறுப்பினர், பொது நிறுவனங்களுக்கான குழு
  • 1980-85 - அமைச்சர், பொதுப்பணித் துறை, நீர்ப்பாசனம், ஊரக வளர்ச்சி மற்றும் போக்குவரத்து, மத்தியப் பிரதேசம்
  • 1982-90 - உறுப்பினர், வணிக ஆலோசனைக் குழு
  • 1987-88 - உறுப்பினர், பொது நோக்கக் குழு
  • 1987-89 - உறுப்பினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழு
  • 1988-89 - அமைச்சர், தொழிலாளர் மற்றும் மனித வள மேம்பாடு, மத்தியப் பிரதேசம்
  • 1989-90 - அமைச்சர், உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் கூட்டுறவு, நீர்ப்பாசனம், நர்மதா மேம்பாடு மற்றும் பொதுச் சுகாதார பொறியியல்
  • 1991 - 10வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1991-95 - தலைவர், தகவல் தொடர்பு குழு; உறுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் நலக் குழு
  • 1995-96 - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சர் (பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை)
  • 1998 - 12வது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2வது முறை)
  • 1998-99 - தலைவர், சபையின் அமர்வுகளில் உறுப்பினர்கள் இல்லாத குழு; உறுப்பினர், விவசாய குழு; உறுப்பினர், பொது நோக்கக் குழு உறுப்பினர், ஆலோசனைக் குழு, சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 15 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலா_வர்மா&oldid=3686904" இலிருந்து மீள்விக்கப்பட்டது