வினைச்சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற வசனத்தில் ஓடினால் அல்லது ஓடுதல் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது அல்லது வீழதல் வினைச்சொல்லாகும்.


முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்.

முற்று இருவகைப்படும். அவை

  • தெரிநிலை வினைமுற்று
  • குறிப்பு வினைமுற்று

எச்சம் இரண்டு வகைப்படும். அவை

  • பெயரெச்சம்
  • வினையெச்சம்

பொருளடக்கம்

[தொகு] முற்று

[தொகு] தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்

எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்

[தொகு] குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

எ.கா: அவன் பொன்னன்.

[தொகு] எச்சம்

[தொகு] பெயரெச்சம்

பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.

எ.கா: படித்த மாணவன்

[தொகு] வினையெச்சம்

வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.

எ.கா: படித்துத் தேறினான்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=வினைச்சொல்&oldid=1087397" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்