விண்கல் வீழ் பள்ளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்கல் வீழ் பள்ளம் (Impact Crater) என்பது ஒரு கோளிலோ ஒரு நிலவிலோ விண்கல் ஒன்று அல்லது விண்கற்கூட்டம் மோதுவதால் ஏற்படும் பள்ளமாகும். இப்பள்ளங்கள் ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள பல கோள்களில் அவதானிக்கப்படக்கூடிய தோற்றப்பாடுகளுளொன்றாகும். இப்பள்ளங்கள் புவியில் அரிதென்றாலும் சில பள்ளங்கள் புவியில் உள்ளன; இவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பெரிஞ்சர் பள்ளம் ஆகும். புவியில் உயிரினங்கள், மண்ணரிப்பு ஆகியவற்றின் காரணமாக விண்கல் வீழ் பள்ளங்கள் காலப்போக்கில் மறைந்து விடும். ஏனைய கோள்களில் விண்கல் வீழ் பள்ளங்கள் நீண்ட காலத்துக்கு நிலைக்கக்கூடியது. புவியின் துணைக்கோளான நிலவில் உள்ள பள்ளங்களை நம் வெற்றுக் கண்ணால் அவதானிக்க முடியும்.