விஜயா கடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜயா கடே (Vijaya Gadde [1] (பிறப்பு 1974) டுவிட்டரின் தலைமை சட்ட அதிகாரி மற்றும் பொது ஆலோசகர் ஆவார்.

2014 ஆம் ஆண்டில்,ஃபார்ச்சூன் இதழ் இவரை டுவிட்டரின் நிர்வாகக் குழுவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணி என்று குறிப்பிட்டது. 2020 ஜனாதிபதித் தேர்தலின் போது டுவிட்டர், விளம்பரங்களை விற்க வேண்டாம் என்று இவர் CEO ஜாக் டோர்சியை கேட்டுக்கொண்டார்.[1] "இது ஒரு நிறுவனமாக எங்களுக்குச் செய்ய வேண்டிய சரியான விஷயம்" என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் அல்ல என்று இதனைப் பற்றி இவர் கூறினார்.[1]

அக்டோபர் 2020 இல், பொலிடிகோ இவரை "மிக சக்திவாய்ந்த தொழில்நுட்ப நிர்வாகி" என்று கூறியது.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

கடே இந்தியாவில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். தனது 3ஆம் வயதில் அமெரிக்கா சென்றார்.[2][3] இவரது தந்தை அமெரிக்காவில் பட்டப் படிப்பினைப் பெற்றார். பின்னர் இவரது குடும்பம் டெக்சாஸின் பியூமாண்டிற்குக் குடிபெயர்ந்தது.[4]

கார்டெல் கார்னெல் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் இன்டஸ்ட்ரியல் அண்ட் லேபர் ரிலேஷன்ஸிலிருந்து தொழில்துறை மற்றும் தொழிலாளர் உறவுகள் பிரிவில் பிஎஸ் பட்டம் பெற்றார் மற்றும் 2000 ஆம் ஆண்டில் நியூயார்க் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் லாவில் இருந்து ஜேடி பட்டம் பெற்றார் [1][3][5]

தொழில்[தொகு]

2011 இல் டுவிட்டரில் சேருவதற்கு முன்பு, சிலிகான் பள்ளத்தாக்கு சட்ட நிறுவனமான வில்சன் சோன்சினி குட்ரிச் & ரோசாதியில் சுமார் ஒரு தசாப்த காலம் கடே பணியாற்றினார், பின்னர் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப நிறுவனமான ஜூனிபர் நெட்வொர்க்கின் சட்டத் துறையில் மூத்த இயக்குநராக பணியாற்றினார் [5][6]

டுவிட்டரில் நடைபெறும் சொல்லாடல் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்பவர்களை பணிக்கு அமர்த்த இருப்பதாக இவர் அறிவித்தார்.

2018 இல், கடே டுவிட்டரில் சேர்ந்தார். அப்போது தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜேக் டோரிசியாவுடன் இணைந்து இந்தியாவின் பல கூட்டங்களில் தலித் ஆர்வலர்களது டுவிட்டருடனான தங்களது அனுபவங்களைப் பற்றப் பேசினார்கள். அந்த சந்திப்புக்குப் பின்னர் செயற்பாட்டாளர் ஒருவர் இவருக்கு "பிராமணியசத்தை நொறுக்குக" எனும் வாக்கியம் அடங்கிய ஒன்றைனைக் கொடுத்தார். பின்னர் அவர் வைத்திருப்பது போல புகைப்படம் எடுக்கப்பட்டது.[7] இந்த புகைப்படம் சர்ச்சையை உண்டாக்கியது. சில விமர்சகர்கள் இது பிராமணர்களின் உணர்வினை காயப்படுத்துகிறது எனவும் சிலர் இந்தியாவில் உள்ள சாதி மற்றும் பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு இது பொருத்தமான பதிலாக இருப்பதாகவும் கருதினர்.[7]

இந்த சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இவர் தொடர்ச்சியான பதிவுகளை டுவிட்டரில் பதிவிட்டார். அதில் ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் எங்களது விருந்தினர்கள் கொடுத்த ஒரு பரிசினை ஏற்றுக்கொண்டு புகைப்படம் எடுத்தோம். இதில் உள்நோக்கம் இல்லை. மேலும் டுவிட்டர் அனைவருக்கும் பொதுவான ஒரு தளமாகும். இந்தியாவில் எங்களது சேவையினை இன்னும் சிறப்பாக்க முயற்சி செய்வோம் எனத் தெரிவித்து இருந்தார்.[7]

மார்ச் 5, 2019 அன்று, டுவிட்டர் தலைமை அதிகாரி ஜாக் டோர்சி மற்றும் பத்திரிகையாளர் டிம் பூல் ஆகியோருடன், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் என்பதன் 1258 ஆவது தொடரில் காடே பங்குபெற்றார், டுவிட்டர் பேச்சு சுதந்திரம், சமூக மற்றும் அரசியல் சார்பு கொண்டதாகவும் உள்ளது என்பதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதித்தனர் [8]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Is Twitter Going Full Resistance? Here's the Woman Driving the Change".
  2. Times Of India profile of Vijaya Gedde published on Jan 09, 2021
  3. 3.0 3.1 "Vijaya Gadde". Fortune. 2014-10-09. Archived from the original on 2019-02-14. பார்க்கப்பட்ட நாள் 2019-02-13.
  4. Frier, Sarah (2014-05-13). "Twitter's Vijaya Gadde Fights for Free Speech, Revenue". News India Times. Archived from the original on 2019-02-14. பார்க்கப்பட்ட நாள் 2019-02-13.
  5. 5.0 5.1 "Vijaya Gadde: "From Texas to Twitter" | NYU School of Law". www.law.nyu.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-02-13.
  6. "Twitter's top female exec on discrimination and overcoming adversity". Fortune. பார்க்கப்பட்ட நாள் 2019-02-13.
  7. 7.0 7.1 7.2 "Twitter CEO trolled for 'smash Brahminical patriarchy' placard". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-13.
  8. "Joe Rogan Experience #1258 - Jack Dorsey, Vijaya Gadde & Tim Pool". March 5, 2019. பார்க்கப்பட்ட நாள் March 6, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயா_கடே&oldid=3622519" இலிருந்து மீள்விக்கப்பட்டது