விக்கிப்பீடியா பேச்சு:வணிக இணைப்புகள் கண்காணிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் வணிகத் தளங்கள் மட்டும் தனித்து எடுக்கப்பட்டு எந்தவித பிற ஆதாரங்களும் இன்றி பட்டியிடப்பட்டுள்ளது.

  • இவை இந்த வணிக நிறுவனங்களினால் சேர்க்கப்பட்டவையா?
  • இல்லை ஆயின், அவற்றில் பெறுமதியான/பொருத்தமான உள்ளடக்கங்களுக்கு இணைப்புத் தரப்பட்டுள்ளதா?

இவ்வாறு தெளிவுபடுத்தாமல் பட்டியலில் சேர்ப்பது பொருத்தம் இல்லை.

  • மேலும், தமிழ்த் தளங்கள் மட்டும் பட்டியல் இடப்பட்டுள்ளன. amazon.com கூகிள் நூல்கள் மற்றும் பிற தமிழ் அல்லாத வணிகங்கள் விடப்பட்டுள்ளன. அவை சேர்க்கப்பட்டாலும், பொதுவான ஒரு கொள்கை தேவை.

தெளிவான வழிகாட்டல்/கொள்கை தேவை. அதன் பின் அதற்கு ஏற்ப பட்டியலைச் சரி செய்ய வேண்டும். --Natkeeran (பேச்சு) 03:54, 4 மார்ச் 2014 (UTC)

நற்கீரன், நான் கண்ட தமிழ் வணிகத் தளங்களைச் சேர்த்திருக்கிறேன். Flipkart என்னும் ஆங்கிலத் தளமும் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் காணும் பிற மொழி வணிகத் தளங்களையும் தாராளமாகச் சேர்க்கலாம். இவை அனைத்துமே நூல் விற்கும் தளங்கள். இவற்றைத் தளத்துக்கு உரிமையானவர்களே வந்து சேர்த்தால் தான் வணிக நோக்கம் என்றில்லை. யார் சேர்த்தாலும், தகவல் தரும் நோக்கத்தில் மட்டுமே சேர்த்தாலும், கூட வணிக இணைப்பு தான். இவற்றில் உள்ள தகவல் எந்த அளவு பெறுமதியானதாக இருந்தாலும் இவற்றை இணைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெறுமதியான தகவலை Goodreads போன்ற தளங்களில் சேர்த்து விட்டு இணைக்கலாம். இது அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் பல ஆண்டுகளாக ஏற்பில் உள்ள கொள்கை. நீங்கள் நீக்கிய தகவலை மீண்டும் சேர்க்கிறேன். இதில் என்ன ஆதாராம் வேண்டும் என்று தெளிவாக கூறுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 05:39, 4 மார்ச் 2014 (UTC)

நற்கீரன்,

//எந்தவித பிற ஆதாரங்களும் இன்றி பட்டியிடப்பட்டுள்ளது. தெளிவான வழிகாட்டல்/கொள்கை தேவை. //

ஏற்கனவே தெளிவான ஆதாரமும் முறையான கொள்கையும் உள்ள முறையீடுகளின் மீதெல்லாம் நடவடிக்கை எடுத்து விட்டீர்களா? :) பிறகெதற்கு தமிழ் விக்கிப்பீடியாவில் கொள்கை, வழிமுறை, ஆதாரம் என்றெல்லாம் பேசி நேரத்தை வீணாக்க வேண்டும்? வேண்டியவர்கள் வேண்டியவாறு செயற்பட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்து விடலாமே? --இரவி (பேச்சு) 11:05, 4 மார்ச் 2014 (UTC)

முன்வைக்கப்பட்டப்பட்ட கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. எடுத்ததுக்கு எல்லாம் ஒரே சிக்கலோடு முடிச்சல் போடுவது அறமற்றது. "தமிழ் விக்கிப்பீடியாவில் கொள்கை, வழிமுறை, ஆதாரம் என்றெல்லாம் பேசி நேரத்தை வீணாக்க வேண்டும்?" என்பது நியாமான மறுமொழியா என்று நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளலாம். --Natkeeran (பேச்சு) 14:17, 4 மார்ச் 2014 (UTC)

நற்கீரன், உங்கள் கேள்விகள் அனைத்துக்குமான பதிலை இங்கேயே தெரிவித்து விட்டேன். என்ன ஆதாரம் வேண்டும் என்ற என் கேள்விக்குத் தான் நீங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.

விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் தரும் ஏழாவது விதி:

"வணிக நோக்குடன் வெளி இணைப்புகளை சேர்க்கக் கூடாது."

ஏற்கனவே உள்ள இந்த விதியே போதுமானது. புதிதாக எந்த விதியும் தேவைப்படுவதாகத் தெரியவில்லை. எது எது வணிக இணைப்பு என்பது பொது அறிவாகவே கண்டு கொள்ளலாம். குறிப்பிட்ட இணைப்பு நீக்கத்தில் மறுப்பு இருந்தால் தெரிவிக்கலாம்.

https://en.wikipedia.org/wiki/Wikipedia:External_links#Links_normally_to_be_avoided கூறுவது

1. Any site that does not provide a unique resource beyond what the article would contain if it became a featured article.

5. Individual web pages[6] that primarily exist to sell products or services, or to web pages with objectionable amounts of advertising. For example, the mobile phone article does not link to web pages that mostly promote or advertise cell-phone products or services.

நூல் குறித்த பக்கத்தில் அந்த நூலை வாங்குவதற்கான விற்பனைத் தளத்துக்கு இணைப்பு தருவது இந்த வரையறையில் அடங்கும்.

அதே பக்கத்தில் மேலும் கூறுவதாவது

15. Instead of linking to a commercial book site, consider the "ISBN" linking format, which gives readers an opportunity to search a wide variety of free and non-free book sources.

எடுத்துக்காட்டுக்கு, ஒரு தமிழ் நூலுக்கான தமிழ் விக்கிப்பீடியா தேடல் பக்கம்:

https://ta.wikipedia.org/w/index.php?title=Special%3ABookSources&isbn=+9788183683470

இங்குள்ள அமேசான் இணைப்பை அழுத்தினால்

http://www.amazon.com/gp/search/?field-isbn=9788183683470 கிடைக்கும்.

ஆங்கில விக்கிப்பீடியாவில் இதே ISBN கொண்டு தேடினால்

https://en.wikipedia.org/w/index.php?title=Special%3ABookSources&isbn=+9788183683470

https://www.goodreads.com/book/show/16078804-napoleon-porkala-puyal?from_search=true

பக்கத்துக்கான இணைப்பு கிடைக்கும்.

ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது போல் பல தெரிவுகளும் தமிழிலும் கிடைக்கும் வகை செய்ய வேண்டும்.

https://en.wikipedia.org/wiki/Wikipedia:ISBN பக்கத்தில் இத்தகைய ISBN இணைப்புகளைத் தருவதைப் பற்றிய விளக்கம் உள்ளது.

தமிழ் பதிப்புலகில் ஒரே நூலை பல இணைய விற்பனைத் தளங்கள் தரும் நிலையில், ஒன்றுக்கு மட்டுமோ ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களுக்கோ எந்த அடிப்படையில் இணைப்பு தருவது?

தவிர, https://en.wikipedia.org/wiki/Wikipedia:External_links#Links_normally_to_be_avoided கூறுவது

1. Any site that does not provide a unique resource beyond what the article would contain if it became a featured article.

கூறுவது போல் அப்படி சிறப்பான தகவல் எதையும் நூல் விற்பனைத் தளங்கள் தருவதாகத் தெரியவில்லை.

மேலும், பட்டியலில் உள்ள இணைப்புகளைச் சேர்த்தவர்களுக்கும் நூல்களை எழுதியவர்களுக்கும் என்ன தொடர்பு என்று ஒவ்வொரு இணைப்பாக பார்த்தால் தான்

https://en.wikipedia.org/wiki/Wikipedia:Conflict_of_interest

அடிப்படையில் கொள்கை மீறல்கள் உள்ளனவா என்று பார்க்க முடியும்.

எடுத்துக்காட்டுக்கு,

தேனி சுப்பிரமணி எழுதிய நான்கு நூல்களைப் பற்றி அவரே எழுதிய நான்கு கட்டுரைகளில் நூல் விற்பனைத் தளங்களுக்கு இணைப்புகள் போகின்றன.

பார்க்க:

இதில் 3 நூல்களைப் பதிப்பித்தவர்கள் கௌதம் பதிப்பகம்

இந்த கௌதம் பதிப்பகத்தை நடத்துபவர் இன்னொரு தமிழ் விக்கிப்பீடியரான பயனர்:Gcsekaran என்னும் கோ. சந்திரசேகரன்.

என்பது போல் 10+ நூல்களுக்கான கட்டுரைகளில் அவர்களின் பதிப்பகத்துக்கான இணைப்பு போகிறது. இந்தக் கட்டுரைகளை எழுதியவர் தேனி சுப்பிரமணி.

இது விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள் கொள்கையின் எட்டாம் விதியான

ஒரு விக்கிப்பயனரின் பக்கத்தை மற்றொரு விக்கிப்பயனர் இணைப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆதாய முரண் (Conflict of Interest) ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.

என்பதனை மீறுகிறது. இன்னொரு விக்கிப்பயனரின் தளம் என்பதனை விட, இருவரும் தொழில்முறை உறவில் உள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இருவர் மீதான கையாள் செயற்பாடு பற்றிய முறையீடு ஒன்று நிலுவையில் நிற்கிறது. இது வரை அதனை விசாரிக்க ஆள் இல்லை.

உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (நூல்) நூலில் தனது முத்துக்கமலம் தளத்துக்கு இணைப்பு தந்ததன் மூலம்

விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள் கொள்கையின்

ஒரு பயனர் தனது சொந்த வலைத்தளத்துக்கோ, வலைப்பதிவுக்கோ வெளி இணைப்பு தரக்கூடாது.

என்ற விதியைத் தேனி சுப்பிரமணி மீறியுள்ளார்.

இதே போல் 175+ பக்கங்களில் கொள்கை மீறலில் ஈடுபட்டுள்ளார்.

சந்திரசேகரின் பங்களிப்புகளைப் பார்த்தீர்கள் என்றால்,

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Gcsekaran

இங்கு உள்ளது போல் தனது தளங்களுக்கு வெளியிணைப்பு தருவதை மட்டுமே செய்து வருகிறார்.

நற்கீரன்,

//எடுத்ததுக்கு எல்லாம் ஒரே சிக்கலோடு முடிச்சல் போடுவது அறமற்றது. //

அறம் என்பதும் நியாயம் என்பதும் உங்களுக்குத் தோதான இடத்தில் மட்டும் செயற்படுத்துவது அன்று.

ஒரு இடத்தில் கொள்கை மீறலைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, தேவையில்லாத இடத்தில் கொள்கை உருவாக்குங்கள் என்று சுற்றலில் விட்டால் அறச்சீற்றம் தான் வரும்.

எல்லாவற்றையும் ஒரே சிக்கலோடு முடிச்சு போடுவது எண்ணமில்லை. ஆனால், மேற்கண்ட எடுத்துக்காட்டுகளே எப்படி தானாகவே எல்லாம் ஒன்றோடு ஒன்றாகச் சிக்கிக் கொண்டுள்ளன என்பதனைச் சுட்டிக் காட்டும்.

முடிந்தால், துணிவும் நேர்மையும் இருந்தால், இங்கு சுட்டிக்காட்டியுள்ள எண்ணற்ற கொள்கை மீறல்களை ஏற்கனவே உள்ள கொள்கைகளின் படி நடவடிக்கை எடுத்துச் செயற்படுத்திக் காட்டுங்கள். அது தமிழ் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை, நடுநிலைத்தன்மையைக் கூட்டும்.

எந்தெந்த விதிகளின் அடிப்படையில் நான் உருவாக்கிய இந்த பட்டியல் சரி என்று முறையாக விளக்கம் அளித்துள்ளேன். இந்த அடிப்படையில் நீங்கள் நீக்கிய உள்ளடக்கத்தைச் சேர்க்கிறேன். மீண்டும் இதனை நீக்க எண்ணுவீர்கள் என்றால்,

https://en.wikipedia.org/wiki/Wikipedia:Wheel_warring#Wheel_war

பார்த்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 21:14, 4 மார்ச் 2014 (UTC)


தமிழ் நூல்கள், தமிழ் நூல் கடைகள் மட்டும் பட்டியல் இடப்பட்டுள்ளன. ஏன்? எ.கா தி ஹெல்ப் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் அமோனுக்கே இணைப்புத் தரப்பட்டுள்ளன. --Natkeeran (பேச்சு) 21:42, 4 மார்ச் 2014 (UTC)
ஒவ்வொரு வெளி இணைப்பும் case by case ஆகவே அணுகப்பட வேண்டும். வெறுமே, வணிக இணைப்பு என்று நீக்கி விட முடியாது. ஆங்கிலம் போல் தமிழ்ச் சூழலில் ISBN, Worldcat விரிவான பயன்பாட்டில் இல்லை. --Natkeeran (பேச்சு) 21:51, 4 மார்ச் 2014 (UTC)

ஆங்கிலம் போல் தமிழ்ச் சூழலில் ISBN, Worldcat விரிவான பயன்பாட்டில் இல்லை என்பதால் வணிகத் தளங்களுக்கு இணைப்பு வழங்லாம். இவ்வாறே ஆங்கிலம் போல தமிழில் கலைச்சொற்கள் இல்லையென்பதால் ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்தலாம். ஆ.வி போல த.வி.யில் கட்டுரைகள் இல்லாததால் ஆ.வி.யையே பயன்படுத்தலாம். முடியல....

நூல்களை விற்கும் தளங்களுக்கு இணைப்புக் கொடுப்பது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இது விக்கிமீடியா நிறுவனம் விக்கிப்பீடியாவில் விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஒப்பானது. விக்கிப்பீடியாவில் இணைப்புக் கொடுக்கப்படும் தளங்கள் கூகிள் தேடலில் முதன்மையாக வரும். அவ்வகையில் த.வி. இணைப்புக்கள் குறித்த தளங்களின் விற்பனையை அதிகரிக்கும். அத்தோடில்லாமல் இங்கே இணைக்கப்படாத தளங்களின் வணிகமும் பாதிக்கப்படும். கோபி (பேச்சு) 03:04, 5 மார்ச் 2014 (UTC)

நற்கீரன், இதில் என்ன நடுநிலைமை பிரச்சினை இருக்கிறது? வணிக இணைப்பு தரக்கூடாது என்பது அடிப்படைக் கொள்கை. இதனை தமிழ் எதிர் ஆங்கிலப் பிரச்சினையாக காட்டத் தேவையில்லை. நான் ஏற்கனவே Flipkart என்னும் ஆங்கிலத் தளத்தைச் சேர்த்திருக்கிறேன். இன்னும் தென்படுகிற மற்ற மொழித் தளங்களையும் சேர்ப்போம். சாப்பானிய மொழி தளத்துக்குப் போனாலும், சீனத் தளத்துக்குப் போனாலும் வணிக இணைப்பு வணிக இணைப்பு தான். ஆங்கில விக்கிப்பீடியாவில் கொள்கை தெளிவாக உள்ளது. ஆனால், பல பக்கங்கள் தமிழ் விக்கிப்பீடியா போலவே துப்புரவை வேண்டி நிற்கின்றன. ஆங்கில விக்கிப்பீடியாவின் https://en.wikipedia.org/wiki/The_Alchemist_%28novel%29 , https://en.wikipedia.org/wiki/Inferno_%28Dan_Brown_novel%29 போன்ற பரவலான கவனிப்பு பெறும் புத்தகங்களுக்கான கட்டுரைகளைப் பார்த்தீர்களானால் அவை நூல் விற்பனைத் தளங்களுக்கு இட்டுச் செல்லாது. Inferno கட்டுரையில் அலுவல் முறை தளத்துக்கு இணைப்பு இருக்கும். அது ஏற்புடையது.

இங்கு தேவைப்படுவது வணிக இணைப்பு என்றால் என்ன என்ற வரையறையும் எடுத்துக்காட்டுகளும் தான். அதன் பிறகு எது வணிக இணைப்பு என்பதைத் துப்புரவுப் பங்களிப்பாளர்களின் துணிபுக்கு விட்டு விட வேண்டும். அவர்களின் குறித்த செயல்பாட்டில் மாற்றுக் கருத்து இருந்தால் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். ஆனால், ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடிய வெளியிணைப்புகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அணுக வேண்டும் என்பது தேவையற்றது. நடைமுறைச் சாதியமற்றது.

நூல் பற்றிய கட்டுரையில் நூல் விற்பதற்கான பக்கத்துக்கு இணைத்திருந்தால் அது வணிக இணைப்பு. அந்தத் தளம் நூல்களை மட்டும் விற்கிறது என்றால் அது இன்னும் ஒரு படி மேலே போய் தவிர்க்கப்பட வேண்டிய வணிக இணைப்பு. அலுவல் முறை பதிப்பாளரின் தளத்தின் நூல் விற்பனை பக்கத்துக்குப் போனால் கூட, கோபி சுட்டியது போல், விக்கிப்பீடியாவில் இணைக்க முடியாத இல்லாத தகவல் எதையும் பதிப்பாளரின் பக்கம் தந்துவிடுவதில்லை. --இரவி (பேச்சு) 04:38, 5 மார்ச் 2014 (UTC)

தெளிவான ஆதாரம் இல்லை[தொகு]