விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கி வேண்டுகோள்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்பு:ActiveUsers பக்கத்தில் நிறைய தானியங்கிகள் தென்படுகின்றன. இவற்றில் மற்ற பல விக்கிகளில் தானியங்கிகளாக ஏற்கப்பட்டுள்ளவைக்கு, நாமாகவே தானியங்கி அணுக்கம் கொடுத்துவிடலாமா? இதன் மூலம் அண்மைய மாற்றங்களிலும் இது போன்ற சிறப்புப் பக்கங்களிலும் தானியங்கிகளை ஒதுக்கிப் பார்க்க இயலும். ஒரு வேளை இவற்றில் சில பிற்காலத்தில் பிழையான தொகுப்புகளைச் செய்தால் உடனடியாக கவனத்துக்கு வராமல் போகும் என்பது தான் சிக்கல்.--இரவி (பேச்சு) 18:57, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

மாற்றுக் கருத்துகள் இல்லா நிலையில் இப்பரிந்துரையைச் செயற்படுத்த முனைகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 11:46, 18 பெப்ரவரி 2013 (UTC)

தானியங்கி விண்ணப்பக் கால எல்லை[தொகு]

பொதுவாக பல விக்கிகளில் தானியங்கி விண்ணப்பம் செய்து ஒரு வாரத்திற்குப் பிறகு, சோதனைப்பதிவுகளை கண்டு அணுக்கம் வழங்கப்படுகிறது. அணுக்கம் வழங்குவதற்கான கால எல்லையை, நமது விக்கியில் எவ்வளவு நாட்கள் வரை, வைத்துக்கொள்ளலாம்? --உழவன் (உரை) 03:38, 10 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

ஒரு வாரம் போதுமானது. விண்ணப்பத்தை இடும் போது அதிகாரி அணுக்கம் உள்ள பயனர்களுக்கு ஒரு செய்தியிடுவது உதவும். --இரவி (பேச்சு) 05:30, 10 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]