விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிக் கட்டுரையாக்கம்/பள்ளிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் வரைவு[தொகு]

ஆலமரத்தடியில் உரையாடியதன் அடிப்படையில் மாதிரிக் கட்டுரை ஒன்றை உருவாக்கியுள்ளேன். பள்ளியைத் துல்லியமாகக் காட்டும் மேற்கொள்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இதர விடுபட்ட தகவல்களை இணைக்க வேண்டும். வேறு எவற்றைச் சேர்க்கலாம் என்றும் பரிந்துரைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 04:21, 20 மே 2023 (UTC)[பதிலளி]

முயற்சிக்கு பாராட்டுகள். உரிய பகுப்பு சேர்வதும் உறுதிசெய்யப்படல் வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
வணக்கம் நீச்சல், கட்டுரையின் சான்றுகளின் இணைப்பினைச் சொடுக்கினால் தரவுகளைச் சரிபார்க்க இயலவில்லை. தரவு எதுவுமில்லை என்று வருகிறது. //வேறு எவற்றைச் சேர்க்கலாம்// தகவற் பெட்டியில் பள்ளியின் EMIS எண், மாவட்டம் என்பதனையும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி --ஸ்ரீதர். ஞா (✉) 16:25, 20 மே 2023 (UTC)[பதிலளி]
"ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளியாகும்" என்பதை "ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகும்" என்று மாற்றினால் நன்றாக இருக்கும்.--நந்தகுமார் (பேச்சு) 19:23, 20 மே 2023 (UTC)[பதிலளி]
வணக்கம் @Neechalkaran:

1. கட்டுரைத் தலைப்பு செம்புக்குடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்று இருக்க வேண்டும்.

2. கட்டுரையின் தலைப்புகளில் ஊர்ப் பெயர் முதலில் வரவேண்டுமா? அல்லது இறுதியிலா? காரணம், அரசுப்பள்ளிகளை மட்டும் உருவாக்க உள்ளதால் பகுப்பில் அனைத்துக் கட்டுரைகளும் அ எனும் வரிசையில் மட்டும் தானே வரும்.

3. ஆலமரத்தடியில் இந்தத் திட்டம் தொடர்பாக தெரிவிக்கும் முன் வேறு ஏதேனும் பணிகள் நாம் செய்ய வேண்டியுள்ளதா? ஸ்ரீதர். ஞா (✉) 14:54, 23 மே 2023 (UTC)[பதிலளி]

வெற்றுப் பக்கமாக எந்த உரலி உள்ளது? மாற்ற வேண்டிய உதாரண மேற்கோள்கள்களைத் தாருங்கள். EMIS எண் எங்கே உள்ளது? பெயர்கள்/பகுப்பைச் சரி செய்துள்ளேன். ஊர்ப் பெயர் முதலில் வரட்டும். இனி ஆலமரத்தடியில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இங்கே எடுக்கும் ஒருமித்த முடிவின்படி கட்டுரை உருவாக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 02:30, 25 மே 2023 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும் UDISE என்பதற்கு பதிலாக EMIS எனக் குறிப்பிட்டு விட்டேன், தாங்கள் தற்போது அதைச் சேர்த்து விட்டீர்கள். //வணக்கம் மூர்த்தி, சீறிதர் கொடுத்துள்ள பக்கத்தில், நமக்குத் தேவையான தரவுகளை கேட்பதன் மூலம் பெறலாம். உதாரணமாக, Kanniyakumari (1st box), second box (I do not know, so I left it blank), GHSS-ARALVAYMOZHI (3rd box) என்பதைத் தேடுவதன் மூலம் நமக்குத் தேவையான தகவல்களை பெற முடியும்.
ஏற்கனவே சொடுக்கிப் பார்த்துவிட்டேன். தனி தேடு பக்கங்களுக்கு இணைப்பினைக் கொடுக்க இயலாது. நீங்கள் கொடுத்துள்ள தேடு பக்கத்திற்கு மட்டுமே இணைப்பைக் கொடுக்க முடியும்.--நந்தகுமார் //
இது ஏற்கனவே நடைபெற்ற உரையாடல். இதனைத் தான் நான் மேலே குறிப்பிடேன். உரலி வெற்றாக இல்லை. மாறாக நாம் கொடுக்கும் UDISE எண்ணைக் கொண்டு தரவுகளைச் சரிபார்க்க இயலும். அவ்வாறு இருந்தால் போதும் எனில் நல்லது -- ஸ்ரீதர். ஞா (✉) 02:34, 26 மே 2023 (UTC)[பதிலளி]
வணக்கம் @Neechalkaran and Sridhar G: பள்ளி எந்த ஆண்டு துவக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் கிடைத்தால் அவற்றையும் சேர்த்தால் அது ஒரு கூடுதல் தகவலாக இருக்கும்.--கு. அருளரசன் (பேச்சு) 03:17, 26 மே 2023 (UTC)[பதிலளி]
உதாரணமாக இந்தப் பக்கத்தில் GHSS NANGOORE (33191002801) எனக் கொடுத்தால் பள்ளிக்கான சிறு படம் வரும் அதில் சொடுக்கிப் பாருங்கள்.வலதுபுறம் வரும் தேர்வில் Report Card --> View என்பதில் பள்ளி குறித்தான 90% தகவல்கள் வரும் அதில் எவற்றையெல்லாம் சேர்க்க வேண்டும் எனக் கூறினால் அதனையும் சேர்க்க முயற்சிக்கலாம். ஸ்ரீதர். ஞா (✉) 03:30, 26 மே 2023 (UTC)[பதிலளி]
https://schoolgis.nic.in/ தளத்தில் உள்ள தகவல்களில் நிறுவன ஆண்டைத் தவிர நமக்குத் தேவையான தகவல்கள் என்னென்ன உள்ளன? ஆண்டாண்டு மாறக்கூடிய தகவல்கள் தேவையில்லை; கட்டடங்களின் எண்ணிக்கை, வகுப்பறைகளின் எண்ணிக்கை ஏற்கத்தக்கனவா? அதற்கேற்பத் தகவல்களைத் திரட்டிக் கொண்டு வருகிறேன். இடையில் முக்கியமான தமிழாக்கப் பணியினை எவ்வாறு செய்வது?-நீச்சல்காரன் (பேச்சு) 04:24, 26 மே 2023 (UTC)[பதிலளி]
schoolgis தளத்திலிருந்து மதுரை மாவாட்டப் பள்ளிகள் கொஞ்சத்தைத் திரட்டிப் பார்த்தேன். ஒரு சில பள்ளிகளின் udise எண் schoolgis.nic.in இல் இல்லை(உதா 33240100104), சில பள்ளிகளுக்கு Report Card இல்லை(உதா 33240100301). எனவே முழுத் தகவல் கொண்ட பள்ளிகளை மட்டும் ஏற்றமுடியும் என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 16:19, 26 மே 2023 (UTC)[பதிலளி]

மாதிரி திட்டம்[தொகு]

@Neechalkaran and Sridhar G: கேரளத்தில் அரசு ஆதரவில் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுளது. அது விக்கிப்பீடியா பக்கத்தைப் போலவே உள்ளது. அந்த பக்கத்தை மலையாள விக்கிப்பீடியர் jonoy கோவையில் எனக்குக் காட்டினார். அதன் பெயர் எனக்கு நினைவில் இல்லை. அவர்கள் எந்த மாதிரியான தகவல்களை உள்ளிட்டிருப்பார்கள் என்பது தெரிந்தால் நாமும் பள்ளிகள் கட்டுரையில் சேர்க்கவேண்டிய தகவல்கள் குறித்த புரிதல் உண்டாகும்.--கு. அருளரசன் (பேச்சு) 08:10, 26 மே 2023 (UTC)[பதிலளி]
https://schoolwiki.in ஸ்ரீதர். ஞா (✉) 08:33, 26 மே 2023 (UTC)[பதிலளி]
ஆம் Schoolwikiதான் கேரளத்தில் அரசு ஆதரவில் ஒவ்வொரு பள்ளிகளைக் குறித்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக விரிவாக அது உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கேரளத்தின் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் குறித்த தகவல்கள் தனித்தனிக் கட்டுரைகளாக மாவட்ட வாரியாக உள்ளன. அதன் வடிவமைப்பு விக்கிப்பீடியாவைப் போலவே உள்ளது. அதிலிருந்து எடுத்துகாட்டுக்கு ஆழப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் பக்கத்தை இங்கு இட்டுள்ளேன். இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்களை ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 08:54, 26 மே 2023 (UTC)[பதிலளி]
ஸ்கூல்விக்கி என்பதன் நோக்கம் வேறு. தமிழ் விக்கிப்பீடியாவிற்கேற்ற அம்சங்களை எடுத்துக் கொள்ளலாம். தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் அவ்வளவு தகவல்களை வெளியிடவில்லை. எனவே கிடைத்துள்ளவற்றை வைத்தே திட்டமிடமுடியும். அல்லது எங்கேனும் கிடைத்தால் அறியத் தரலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 16:19, 26 மே 2023 (UTC)[பதிலளி]
வணக்கம் @Neechalkaran: மேற்காணும் உரையாடலின் அடிப்படையில் தானியக்கமாக பள்ளிகள் கட்டுரைகளை உருவாக்கித் தர இயலுமா? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:11, 25 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
முன்னரே கூறியவாறு தரவுகள் தமிழில் இல்லை. யாரேனும் பெயர்களை மாற்றிக் கொடுத்தால் தானியக்கக் கட்டுரையை உருவாக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 09:40, 26 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
நல்லது, முதலில் விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் பட்டியலை கொடுக்க இயலுமா? பின்னர் மற்ற மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களின் துணை கொண்டு பள்ளிகளின் பெயர்களை உங்களுக்கு தமிழில் தருகிறேன். நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:08, 26 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]