விக்கிப்பீடியா பேச்சு:கிரந்த எழுத்துப் பயன்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் எழுத்து 33 மட்டுமே 247 அல்ல

முந்திய கலந்துரையாடல்[தொகு]

வழக்கில் கிரந்தம்[தொகு]

  • க்ஷ கிட்டத்திட்ட வழக்கிழந்து விட்டது க் + ஷ என்று தனித்தனி எழுத்துகளாக எழுதும் வழக்கம் இருக்கிறது.
  • மணிப்பிரவாள நடை என்பது 19ஆம் நூற்றாண்டு பிற்பகுதி, 20ஆம் நூற்றாண்டு பிற்பகுதி்யில் மிகுந்திருந்த எழுத்து நடை என்று நினைக்கிறேன். கிரந்தம் காலத்தால் மிகவும் முந்தியது. மணிப்பிரவாள நடை காரணமாக கிரந்தப் பயன்பாடு மிகுந்ததா என்பது சிந்தனைக்குரியது.
  • ஸ்ரீ என்ற எழுத்தையும் பயன்பாட்டில் உள்ள தமிழல்லா எழுத்துகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
  • கிரந்த எழுத்துகள் வழக்கிழந்துள்ளன என்று சொல்ல இயலாது. வட மொழி்த் தாக்கம் குறைந்தாலும், உலக, ஆங்கிலத் தாக்கம் காரணமாக பொது ஊடகங்களில் கிரந்தப் பயன்பாடு கூடி வருவதாகவே தெரிகிறது--ரவி 17:58, 6 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]
தகவல்களில் தவறுகள் இருந்தால் தயவு செய்து திருத்தி விடுங்கள். கிரந்தம் வழக்கிழந்தது என்று சொன்னது, நாம் எல்லா கிரந்த எழுத்துகக்ளையும் பயன்படுத்துவதில்லை தானே. --Natkeeran 18:11, 6 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

//ஜூன், ஜூலை = சூன், சூலை // என்பதில் சூன், சூலை பொருத்தமாக இல்லை என்றே கருதுகின்றேன். சூன், சூலை வேறு அர்த்தங்களைத் தரும் சொற்களாகவும் பயன்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும். நாம் யூன் யூலை என்றே பயன்படுத்துகின்றோம்.--HK Arun 00:52, 14 ஜனவரி 2009 (UTC)

அருண், சூன், சூலை என்பது பெரு வழக்கு (தமிழ் நாட்டில்). பிறபொருள்கள் (சூலை நோய்) இருப்பது தவிர்க்க முடியாதது. தமிழிலும் ஒரே சொல்லுக்கு பல பொருட்கள் இருக்கலாம். இங்கு வேற்று மொழிச்சொல்லின் எழுத்துப் பெயர்ப்பைப் பற்றி பேசுகிறோம். ஆகவே அது பற்றிக் கவலைப் படவேண்டாம். சூன் சூலை என்பனவற்றை choon, choolai என்று முதல் எழுத்தை வல்லினமாக ஒலித்தல் வேண்டும். அப்படி ஒலிக்கும் பொழுது வரும் ஒலித்திரிபு மிகச்சிறியது. J என்னும் எழுத்துக்கு பல மொழிகளில் ய என்னும் ஒலிப்பு உள்ளது எ.கா டாய்ட்சு மொழி (செருமன் மொழி). பல மொழிகளில் ஜ என்னும் ஒலி கிடையாது. தமிழ் இதில் ஒன்றும் பெரிய விதி விலக்கு அல்ல. தமிழில் மெல்லின மெய்யெழுத்துக்குப் பின் வரும் சகரம் ஜகரமாக ஒலிக்கும் (சற்றே மூகொலி இருக்கும்). எ.கா பஞ்சு, கெஞ்சு, தஞ்சை, பஞ்சி நூல், செஞ்சி. --செல்வா 01:58, 14 ஜனவரி 2009 (UTC)

நக்கீரன் “கிரந்த எழுத்துமுறையின் பயன்பாடு ஒருவாறு வழக்கு குன்றியுள்ளது என்றாலும் இன்னும் சிலர் பெருக்கிக்கொண்டே வருகின்றனர்.” என்று சொன்னால், சிலர் திட்டமிட்டு , அதாவது கிரந்த பயன்பாட்டை வேண்டுமென்றே , தேவையில்லாமல் ‘அதிகமாக’ உபயோகிக்கின்றனர், என்ற பொருளில் வருகிரது. அது தவறு. அதனால் அப்பகுதியை எடுத்துவிடலாம். −முன்நிற்கும் கருத்து 92.39.207.120 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

அந்தப் பொருளில் உண்மை இல்லை என்று சொல்கிறீர்களா? ...இந்தி என்று எழுதாமல் ஹிந்தி என்றும்..மகா சிவாரத்திரி என்று எழுதாமல் மஹா சிவராத்திரி, மகா உற்சவம் என்று எழுதாமல் மஹா உற்சவம் என்றும் எழுதுவதும் எதற்காக?....சிலர் வேண்டும் என்றே எழுதுகிறார்கள் என்றே நினைக்கிறேன். அந்தக் கருதோடு உடன்பட்டாலும், அந்தக் கருத்தை நான் சேக்கவில்லை என்றே நினைக்கிறேன். --Natkeeran 23:23, 23 பெப்ரவரி 2009 (UTC)
நாம் நடப்பதைத்தான் சொல்ல வேண்டுமே தவிற, மற்றவர்களின் ‘உள்நோக்கை’ பற்றி எழுதவேண்டாம்.' −முன்நிற்கும் கருத்து 92.39.207.120 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
கிரந்தத் திணிப்பு நடப்பதுதான். --Natkeeran 23:27, 23 பெப்ரவரி 2009 (UTC)
’கிரந்தத் திணிப்பு’ என தனியாக ஒரு கட்டுரை எழுதுங்கள். அதில் ஆதார பூர்வத்துடன் கடந்த நூற்றாண்டில், எப்படி கலாசார ரீதியாக எழுத்துக்களை வறுப்புருத்துகிறாரார்கள் என எழுதுங்கள். −முன்நிற்கும் கருத்து 92.39.207.120 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

பரிந்துரைகள்[தொகு]

  • தானாக கிரந்தம் தவிர்த்து எழுத விரும்புவோருக்கான வழிகாட்டி - கிரந்தம் தவிர்த்து எழுதுவது எப்படி?
  • ஏற்கனவே தமிழருக்கு நன்கு அறிமுகமான சொற்கள், பெயர்களில் உள்ள கிரந்தம் நீக்குவதற்கான தயக்கம் புரிந்து கொள்ளத்தக்கது. ஆனால் குறைந்தது, நன்கு அறிமுகமாகாத சொற்கள், கூகுள் தேடலில் குறைவான விடைகள் வரும் சொற்கள், முதன் முதலாக ஒரு துறை, பெயர், சொல் குறித்து புதிதாக தமிழில் அறி்முகப்படுத்துகிறோம் என்றால் அவற்றில் மட்டுமாவது இயன்ற அள்வு கிரந்தம் தவிர்த்தும் தமிழ் இலக்கண விதிகளுக்கு ஏற்பவும் எழுதலாம். முதலிலேயே கிரந்தம் தவிர்த்து அறிமுகப்படுத்தி விட்டால், பிறகும் அதை அனைவரும் பயன்படுத்த தயக்கம் வராது--ரவி 05:44, 11 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

கிரந்தத்துக்கு சார்பான வாதங்கள்[தொகு]

வரலாற்று வாதம்[தொகு]

கிரந்தம் தமிழ்ச் சூழலில் எழுந்த ஒர் எழுத்துமுறை. தமிழ் மொழியின் வரலாற்றிலும், தமிழர் வரலாற்றிலும் கிரந்தம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. குறிப்பாக பல நூல்களில் கிரந்தம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை தொடர்ந்து புரிந்து கொள்ள கிரந்தம் அவசியம்.

சமசுகிருதம், கருநாட இசை வாதம்[தொகு]

கிரந்தம் சமசுகிருத சொற்களையும், கருநாக இசைச் சொற்களையும் குறிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சமசுகிருதத்தில் இருந்து தமிழ் பல்லாயிரக்கணக்கான சொற்களைப் பெற்றுள்ளது. அவற்றை சரிவர குறிக்க கிரந்தம் அவசியம். குறிப்பாக கருநாடக இசை கலைச்சொற்களை குறிக்க கிரந்தம் அவசியம்.

பொது வழக்கு வாதம்[தொகு]

இன்று தமிழில் வெளிவரும் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள் எல்லாம் கிரந்தத்தை பெரிதும் பயன்படுத்துகின்றன. இயல்பாக கிரந்தம் தமிழில் வழங்குகிறது.

ஒலித் துல்லியம் வாதம்[தொகு]

தமிழில் ஸ், ஜ, ஷ், ஹ ஆகியவற்றுக்கு குறியீடுகள் இல்லை. அவற்றை துல்லியமாக குறிக்க கிரந்த எழுத்துக்கள் தேவை. குறிப்பாக ஆங்கில பிற மொழிச் சொற்களை குறிக்க கிரந்த எழுத்துக்கள் தேவை. --Natkeeran 03:07, 8 ஏப்ரல் 2009 (UTC)

பரிணாம வாதம்[தொகு]

தமிழ் வரிவடிவம் காலத்திற்கேற்ப குறியீடுகளைச் சேர்த்துக்கொண்டதுபோல ஒலிவடிவமும் காலத்திற்குயேற்ப சேர்த்துக்கொள்வதில் தவறில்லை.

பாடத்திட்டம் வாதம்[தொகு]

தற்போது தமிழகம் மற்றும் இலங்கைத் தமிழ்ப் பாடத்திட்டங்களில் மாற்றொலி இல்லாத இடங்களில் எல்லாம் கிரந்தம் வழமையாகப் பயன்படுத்தப்படுகிறது. அவ்வழியில் பயின்று வந்தவர்களுக்குக் கிரந்தமில்லாத சொல் குழப்பம் உண்டாக்கும். உதாரணம் தமிழக அறிவியல் பாடம், இலங்கை விஞ்ஞானப் பாடம் --நீச்சல்காரன் (பேச்சு) 01:59, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கிரந்தத்துக்கு எதிரான வாதங்கள்[தொகு]

கிரந்தம் தமிழ் எழுத்துக்கள் இல்லை[தொகு]

தமிழ் இலக்கணப் படி தமிழ் எழுத்துக்கள் 247. அவற்றுள் கிரந்தம் அடங்கா.

கிரந்தம் தமிழ்ப் பாடத் திட்டத்தில் இல்லை[தொகு]

இலங்கையிலோ, தமிழ்நாட்டிலோ, இதர நாடுகளிலோ பெரும்பாலான தமிழ்ப் பள்ளி பாடத் திட்டத்தில் கிரந்தம் ஓர் அங்கம் இல்லை. எனவே பெரும்பாலன தமிழ் மாணவர்கள் கிரந்தத்தை புரிந்து கொள சிரமப்படுவார்கள்.

கிரந்தம் பொதுத் தமிழ் இல்லை[தொகு]

பேச்சு வழக்கு போல் அல்லாமல், தமிழ் எழுத்துநடை எல்லாத் தமிழ் மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக அமைய வேண்டும்.

ஏற்கனவே 247, இன்னும் 60 எழுத்துக்களா[தொகு]

இருக்கும் 247 எழுத்துக்களுக்ளே அதிகம் என பலர் முனங்குகின்றனர். இன்னும் 5x12 = 60 எழுத்துக்களை சேர்ப்பது தேவையா.

ஒலிப்புத் துல்லியமாக தமிழில் எழுத மரபு உண்டு[தொகு]

கிரந்த ஒலிகளை தமிழில் எழுத வரையறை செய்யப்பட்ட வழக்கு உடைய மரபு உண்டு. எனவே கிரந்தம் தவிர்து எழுதுவது மிகவும் முடிந்த காரியமே.

கிரந்தம் சமசுகிருத ஆதிக்கத்தின் வெளிப்பாடு[தொகு]

தமிழ் மொழி தனிப் பெரும் செம்மொழி. இடையில் அதன் மேல் அரசியல், சமய, பொருளாதார நோக்கில் ஆதிக்கம் செலுத்திய வடமொழி ஆதிக்கமே கிரந்தம். அதன் தொடர்ச்சி அந்த ஆதிக்கத்தின் வெளிப்பாடே.

--Natkeeran 03:19, 8 ஏப்ரல் 2009 (UTC) இசுவீடன், இசுகண்டினேவியா என்று எழுதுவதை இலகுவாக சுவீடன், சுகண்டினேவியா என்று எழுதலாமே. --செயபால் 18:25, 1 டிசம்பர் 2009 (UTC)

கிரந்தமற்ற தமிழகராதித் திட்டம்[தொகு]

அரிச்சுவடி சொல்லித் தந்த வாத்தியார் "அ" முதல் "ஃ" வரையும் "க" முதல் "ன" வரையும் சொல்லித் தந்தார். உயிரெழுத்து, மெய்யெழுத்து உயிர் மெய்யெழுத்து என இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்களையும் எழுத வாசிக்கக் கற்றுத் தந்தார். அதற்கு மேல் சில எழுத்துக்கள் சிலரது பெயர்களில் இருந்ததை விளக்க அவர் சொன்னது அப்போது புரியவில்லை. அதாவது வடமொழி எழுத்துக்கள் என்றார் கிரந்தம் என்றார், ஒன்றும் புரியவில்லை ஆனால் தமிழல்லாத எழுத்துக்கள் தமிழில் பாவனையில் இருக்கின்றனஎன்பது புரிந்தது.

சிறு வயதிலிருந்தே இது என்னை உறுத்தியது. தமிழுக்குள் ஏன் தமிழல்லாத எழுத்து புகுந்துள்ளது? புகுந்தது தவிர்க்க முடியாதது தான் கூடுதல் விளக்கத்திற்கு தேவையானது தான் என்றால் அந்த எழுத்துக்களை ஏன் தமிழோடு இணைக்கவில்லை? அரிச்சுவடிக்குள் புகுத்த முடியாவிட்டால் அதற்கு என்ன தனிச் சுவடி வேண்டிக் கிடக்கு?

சுருங்கி வரும் அகண்ட உலகைத் தமிழுக்குள் அடக்கக் கிரந்தம் தேவை தானா? தமிழ் வளைந்து கொடுக்க வேண்டுமா? அல்லது வளர்ந்து கொடுக்க வேண்டுமா? தமிழை வளைத்து தரமிழக்க வைக்காமல், அதை வளர்த்து தமிழனுக்குக் கொடுக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே ஏன்னுள் மேலோங்குகிறது.

தற்கால ஆங்கில மொழியில் புதுப் புதுச் சொற்களை ஆண்டு தோறும் அறிமுகப் படுத்தி அகராதியில் உத்தியோக பூர்வமாக இணைத்து விடுகிறார்கள். இப் புதிய சொற்கள் ஆங்கிலத்தில் புதிதாகத் தோன்றியவையும் பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு வந்தவையும் ஆகும். பிற மொழியில் இருந்து வரும் சொற்களை ஆங்கிலமாகத் தான் சேர்த்துக் கொள்கிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணம், தமிழ் என்ற சொல். தமிழ் என்ற சொல்லில் உள்ள "ழ்" என்ற எழுத்தை ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா? முடியாது. அதற்காக அவர்கள் "ழ்" ஐ ஆங்கிலத்தில் உள் வாங்கிக் கொள்ளவில்லை. "ல்" ஐப் பயன் படுத்தி விட்டார்கள். "த" வைக் கூட சரியாகச் சேர்க்கவில்லை. ஆங்கிலத்தை வளைக்காமல் ஒரு புதுச் சொல்லை உருவாக்கி விட்டார்கள்.

இது தான் தமிழுக்கும் தேவை. கோடிக் கணக்கில் சொற்கள் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வரட்டும். அதை தமிழாக்கித் தமிழை வளர்ப்போம்.

இந்த நோக்கில், இங்கே கிரந்தம் கலந்து வரும் சொற்களைத் தமிழ்ப் படுத்தி ஒரு அகராதியைத் தொடங்குவோம். அந்தச் சொற்கள் தமிழல்லாதவையெனினும் பாவனையில் இருப்பவையாகையால் அவ்ற்றைத் தமிழுக்குள் கொண்டு வந்து தமிழை வளர்ப்போம். http://kandjey.tripod.com/ [[1]] --செயபால் 19:40, 2 டிசம்பர் 2009 (UTC)

தமிழில் எழுத்து 33[தொகு]

தமிழ் எழுத்து 33 மட்டுமே 247 அல்ல

எழுத்து எனப் படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து வரன் மரபின் மூன்று அலங்கடையே

இதை முதலில் தமிழர் ஆழ்ந்து உணர்ந்து உள் வாங்கிக் கொள்ள வேண்டும் தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 14:55, 18 செட்டம்பர் 2022 (UTC)