விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 6, 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பென்குயின் தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை அல்ல. பென்குயின்கள் நீர்வாழ்வுக்கு மிகச் சிறப்பாக இசைவாக்கம் பெற்றுள்ளன. இவற்றின் சிறகுகள், பறப்பதற்குப் பயனற்றவை. எனினும் நீரில் பென்குயின்கள் பிரமிக்கத்தக்க வகையில் விரைவாகவும், இலகுவாகவும் நீந்தவல்லவை. படத்தில் பேரரசப் பென்குயின் ஒன்று நீரில் இருந்து வெளியே தாவுகிறது.

படம்: கிறித்தோபர் மிசேல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்