வாழைப்பழ சமக் கதிர் ஏற்பளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழைப்பழ சமக் கதிர் ஏற்பளவு (Banana equivalent dose - BED) என்பது சராசரி அளவுள்ள வாழைப்பழம் ஒன்றினை சாப்பிடுவதால் பெறப்படும் கதிர் ஏற்பளவு ஆகும்.

நாம் சுவாசிக்கும் காற்று அருந்தும் நீர் தங்கும் வீடு என்று எல்லாவற்றிலும் மிகக் குறைந்த அளவு கதிர்வீச்சுக் காணப்படுகிறது.இது சுற்றுச் சூழலில் காணப்படும் கதிரியக்கத் தனிமங்களிலிருந்து வெளிப்படும் கதிர்களாலேயே தோன்றுகின்றன. அந்த வகையில் நாம் தினமும் சாப்பிடுகின்ற வாழைப்பழமும் கதிரியக்கமுடைய பொட்டாசியம் 40 எனும் கதிர் தனிமத்தினை குறைந்த அளவு கொண்டுள்ளது. அதன் காரணமாக தொடர்ந்து கதிர்வீச்சினை பெற ஏதுவாகிறது. இருப்பினும் இவ்வளவு தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பில்லை. காரணம் பொட்டாசியம் உடலிலிருந்து அவ்வப்போது வெளியேற்றப்படுவதாலாகும்.

அணுஉலைக் கசிவு 2500 BED (250 μSv) வா.ச. கதிர்ஏற்பளவாக இருக்கலாம். ஆனால் மார்பு சி.டி. (CT) எடுக்கும் போது 70,000 BED (7 மில்லி சீவர்ட்) கவனிக்கப்பட வேண்டும். கூற்றளவு 80,000,000 பெட் (8 சீவெர்ட்) ஆகும். ஒவ்வொரு கிராம் பழத்திலிருந்தும் 31 பெக்கரல் கதிர்வீச்சு வெளிப்படுவதாகக் கணித்திருக்கிறார்கள். ஒரு சரக்கு வண்டியில் நிறைய வாழைப்பழமிருந்தால் அது தவறான எச்சரிக்கைக் குறியினைக் காட்டும்.

வெளி இணைப்புகள்[தொகு]