வாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வாரம் என்பது ஆடுதின்னாப்பாலை என்னும் மூலிகை. எட்டித் தழையையும் மேயும் வெள்ளாடுகூடக் கறித்துப் பார்த்துவிட்டுத் தின்னாமல் ஒதுக்கி வாரம் செய்வதால் இந்தச் செடிக்கு வாரம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

ஆவாரம்பூ ஆனிரைகள் விரும்பி உண்ணாமல் மேலோட்டமாக ஒதுக்கும் பூ

வாரம் என்னும் சொல் இக்காலத்தில் பங்குபோட்டுக்கொள்ளுதலை உணர்த்தும். உழவர்கள் நிலத்தில் விளையும் கண்டுமுதலை நில-உடைமையாளர்க்குப் பாதி, உழுது பயிரிடுவோருக்குப் பாதி எனப் பங்கு போட்டுக்கொள்ளுதலை வாரம் என்பர்.

சங்ககால நூல்களில் வாரம்[தொகு]

பகுப்பில் ஒரு தொகுப்பு
  • வாரம் என்னும் சொல் ஒரு தொகுப்புப் பகுதியை உணர்த்தும். இதனைத் தொல்காப்பியம் ‘உறழ்ச்சி வாரம்’ எனக் குறிப்பிடுகிறது. இரண்டு தமிழ்ச்சொற்கள் ஒன்று சேரும் புணர்ச்சியில் அந்தச் சொற்கள் திரிந்தும் திரியாமலும் வரும் புணர்ச்சிப் பாங்கை ‘உறழ்ச்சி’ என்பர். [1]
கலிப்பா உறுப்பு
  • வாரம் என்பது கலிப்பாவில் தொகுத்துக் கூறும் முடிவுரைப் பாவுருப்பு. வண்ணகக் கலிப்பாவில் தரவு, தாழிசை, எண், வாரம் என்னும் உறுப்புகள் இருக்கும். [2] [3] [4] [5] இந்த வாரத்தைப் யாப்பருங்கலம் முதலான நூல்கள் சுரிதகம் எனக் குறிப்பிடுகின்றன.
ஒருதலைப் பேச்சு
வாரம் என்பது ஒருதலைப் பேச்சு. அவையில் நண்பரோடு சேர்ந்து அவர் பக்கமாக, ஒருதலையாகப் பேசக்கூடாது. [6]
கைமுத்திரை
வாரம் என்பது நாட்டியம் ஆடுபவல் காட்டும் கைமுத்திரைகளில் ஒன்று. [7]
பின்பாட்டு
வாரம் என்பது பின்பாட்டு. தோரிய மடந்தை வாரம் பாடல் [8]
கிழமை
வாரம் என்பது 7 நாள் கொண்ட தொகுதி. [9]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் 1-102,
  2. தொல்காப்பியம் 3-444-2,
  3. அடக்கியல் வாரம் தரவோடு ஒக்கும் - தொல்காப்பியம் 3-447-1,
  4. செம்பால் வாரம் = செம்பாதி இளம்பூரணர் உரை - தொல்காப்பியம் 3-454-2,
  5. அடக்கியல் வாரம் - தொல்காப்பியம் 3-455-2,
  6. நகையொடு, மந்திரம், நட்டார்க்கு வாரம்,
    பகையொடு, பாட்டு உரை, என்று ஐந்தும் தொகையொடு
    மூத்தார் இருந்துழி வேண்டார், முது நூலுள்
    யாத்தார், அறிவினர் ஆய்ந்து. சிறுபஞ்சமூலம் 83

  7. சிலப்பதிகாரம் 3-20, 21, 50, 136, 137, 153,
  8. சிலப்பதிகாரம் 6-19, சிலப்பதிகாரம் 14-155,
  9. வெள்ளி வாரம் - சிலப்பதிகாரம் 23-135,
"http://ta.wikipedia.org/w/index.php?title=வாரம்&oldid=1617055" இருந்து மீள்விக்கப்பட்டது